10 செகண்ட் கதைகள்

ஓவியங்கள்: செந்தில்

 

உண்மையின் நிழல்

திடுக்கிட்டு எழுந்தான் சந்தோஷ். எதிரில் துப்பாக்கியுடன் ஒருவன். `டுமீல்...' தலை சிதறி கீழே விழுந்தான் சந்தோஷ்.

திடுக்கிட்டு எழுந்தான் சந்தோஷ்!

 - சரவணகுமார்


குளிர்

குளிர்ப்பதனப் பிணவறைக்குள் வைக்கப்பட்டிருந்தது, தீக்குளித்துச் செத்துப்போனவனின் உடல்!

- ந.கன்னியக்குமார்


கணிப்பு

வெள்ளச் சேதத்தைப் பார்வையிட்ட அமைச்சர் ரிப்போர்ட் அனுப்பினார்... `சேதம் அதிகம். தேர்தலில் வெற்றிபெறுவது கஷ்டம்!'
 
- மல்லிகா குரு


காத்திருப்பு

கடலூர் பேருந்து நிலையத்தில் எல்லோரும் காத்துக்கொண்டிருந்தார்கள் எப்போது `படகு’ வரும் என்று!

- கோகி சுரேஷ்


விரயம்

தன் வசதிக்கு ஏற்றாற்போல் வரதட்சணை வாங்கிக்கொள்ளும் ஒரு மருமகனைத் தேடிக்கொண்டிருந்தார் அப்பா, மகளின் காதலைப் புறக்கணித்துவிட்டு!

 - பெ.பாண்டியன்


ஆரூடம்

`உனக்கு நல்ல நேரம் ஆரம்பித்துவிட்டது' என்ற கார்டை எடுத்துக் கொடுத்துவிட்டு, அமைதியாகக் கூண்டுக்குள் சென்று அமர்ந்துகொண்டது கூண்டுக்கிளி!

- ஆறுமுகம்


பாதுகாப்பு

தலைக்குத் தலைக்கவசம் அணியாமல் வண்டியை வேகமாக எடுத்துக்கொண்டு கிளம்பினான் அறிவுமதி. தன் மொபைலுக்கு ஸ்கிராட்ச் கார்டு வாங்க!
 
- கா.லினாகுமாரி


அவசரம்

``வேகமாத்தான் போயேன்டா...'' - சிடுசிடுத்தவனிடம் சொன்னான் ரமேஷ், “நாம பார்க்கப்போற ஆளு செத்ததே ஆக்ஸிடென்ட்லதான்டா!”

 - துங்கை செல்வா


கறார் பேர்வழி

அந்த அரசு அதிகாரி, ஆபீஸில் ரொம்ப ஸ்ட்ரிக்ட். அவரது மேலதிகாரியே சொல்வார், `சொந்தக்காரங்க, தெரிஞ்சவங்கனு எல்லாம் பார்க்க மாட்டார். யாராக இருந்தாலும் கரெக்ட்டா காசு வாங்கிடுவார்’ என்று!

- அஜித்


தப்புக் கணக்கு

கணக்கு டீச்சர்: ஏன்டா... இந்தச் சின்னக் கணக்குக்கூடப் போடத் தெரியாம ஃபெயில் ஆயிருக்கே?

பையன்: நான் பாஸ்தான் மிஸ்.

மொத்த மார்க்கை நீங்க கூட்டினதுல தப்பாயிருக்கு!

- மகேஷ்


Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick