பதில் சொன்னாதான் ஆச்சு ! | Vijay Tv Vj's Get together and jolly interview - Anandavikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/07/2015)

பதில் சொன்னாதான் ஆச்சு !

பா.ஜான்ஸன், கார்க்கிபவா, படங்கள்: தி.ஹரிஹரன்

விஜய் டி.வி காம்பியர்களின் கலகல கெட் டுகெதர். 'சிக்கும் பிரபலங்களிடம் எல்லாம் வளைத்து வளைத்து கேள்வி கேட்பவர்களை, நாம் கேட்டால் என்ன?’ எனத் தோன்றியது... கேட்டோம்..!  

 ''ஒரு கோட்கூட இல்லை!''

'''நீயா?  நானா?’ தலைப்புகளில் உங்க மனசைத் தொட்ட தலைப்பு?''

''திருநங்கைகள் பற்றிய ஷோ. 'திருநங்கைகளை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் மனத் தடை’ என்ற தலைப்பில், திருநங்கைகள் ஒரு பக்கம்... பொதுமக்கள் ஒரு பக்கம் பேசினார்கள். ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்குமே அவர்களைப் பற்றிய ஒரு மாற்றுப்பார்வையைக் கொடுத்த நிகழ்வு அது.''

''வீட்லயும் நீங்க சீரியஸா அறிவுரை சொல்லிட்டே இருப்பீங்களா?''

''நான் அவ்ளோ சீரியஸான ஆள் இல்லைங்க. 'நீயா? நானா?’ என்பது ஒன் மேன் ஷோ இல்லை. அதுக்குப் பின்னாடி பலரோட சிந்தனை, உழைப்பு இருக்கு. அதை முன்வைக்கும் முகம் மட்டும்தான் நான். அதனால் ஒட்டுமொத்த 'நீயா? நானா?’ கேரக்டரை என்னிடம் தேடாதீர்கள். பலரும் என்கிட்ட தனிப்பட்ட முறையில் பேசிட்டு, 'உங்களை வேற மாதிரி நினைச்சேன்’னு சொல்வாங்க. அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?''

''உங்க வீட்டுல 'நீயா? நானா?’ பார்ப்பாங்களா?''

''தலைப்பு பிடிச்சா, ஆர்வமா பாப்பாங்க!''

''நீங்க அணியும் 'கோட்’டை வெச்சே உங்களைக் கிண்டல் பண்றாங்களே?''

''உண்மை என்னன்னா, என் கல்யாணத்துக்குகூட கோட் போடாதவன் நான். சரியா டை கட்டவும் தெரியாது. ஷோவில் முதுகுப் பக்கத்துல மைக் ரிசீவர் மாட்டியிருப்பேன். கோட் இல்லாம அதை மட்டும் மாட்டியிருந்தா, ஒருமாதிரி உறுத்தும். அதான் கோட். மத்தபடி என்னை வெளியே எங்கேயும் கோட் போட்டுப் பார்க்க முடியாது!''


''ரெஸ்ட்ல இருந்தேன்!''

''விஜய் டி.வி-யில இருந்து நீங்க விலகிட்டீங்க... அது, இதுனு தகவல்... என்ன ஆச்சு?''

''அப்படி ஒரு தகவல் சொன்னப்ப, யாரோ சும்மா விளையாட்டுக்காகக் கலாய்க்கிறாங்கனு நினைச்சேன். அப்புறம்தான் தெரிஞ்சது... அப்படி ஒரு வதந்தி சீரியஸா பரவிட்டிருக்குன்னு. ஆனா, எனக்கும் சேனலுக்கும் ஒரு பிரச்னையும் இல்லை. ஒரு சின்ன ரெஸ்ட்ல இருந்தேன். அவ்வளவுதான். ஒரு சின்ன கேப் விட்டதுக்கே நம்மளை இந்த அளவுக்குத் தேடுறாங்கனு நினைக்கிறப்ப... கொஞ்சம் சந்தோஷமாத்தான்ப்பா இருக்கு. இவங்க அன்புக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போறேனோ..!''

''உங்க காம்பியரிங் பற்றி உங்க கணவர் என்ன கமென்ட் கொடுப்பார்?''

''என் நிகழ்ச்சியை அவர் எப்பவாவதுதான் பார்ப்பார். அப்படிப் பார்த்தார்னா, 'ஹேய் சூப்பர்... அந்த கெஸ்ட் என்ன அழகா பதில் சொல்றாங்க பாரேன்’னு சொல்லி வெறுப்பேத்திட்டுப் போயிடுவார். அவ்வளவுதான்!''

''இன்னும் 50 வருஷம் கழிச்சு என்ன ஷோ பண்ணுவீங்க?''

''வாவ்... நான் 50 வருஷம் கழிச்சும் ஷோ பண்ணுவேன்னு நீங்க நம்புறதுக்கே, உங்களுக்கு சரோஜாதேவி யூஸ் பண்ண சோப்பு டப்பா கொடுக்கலாம். ம்ம்ம்... ஒருவேளை அப்ப காபி வித் டி.டி சீஸன்-60 பண்ணிட்டிருப்பேன்!''

''வீட்ல என்ன விஷேசம்?''

''இருக்குல்ல... வீட்டுக்குப் புதுசா ஒரு ஆள் வந்திருக்கார். பப்பி ஒண்ணு வாங்கியிருக்கோம். ச்சோ ஸ்வீட் பாய். என்ன பேர் வைக்கலாம்னு யோசிச்சுட்டிருக்கோம்!''

'' 'ஹேய் சூப்பரப்பு’னு சொல்ல மாட்டாராம்!''

'''சிரிச்சாபோச்சு’ ரவுண்டுல நடந்த சுவாரஸ்யமான விஷயம் ஏதாவது சொல்லுங்க!''

''அது எக்கச்சக்கமா இருக்கு. வர்ற கெஸ்ட்டுகளிடம், 'இது ஒண்ணும் சீரியஸான போட்டி இல்லை. ஜாலி விளையாட்டுத்தான். உங்களுக்குச் சிரிப்பு வந்தா உடனே சிரிச்சிடுங்க’னு சொல்லுவோம். ஆனா, அவ்வளவு காமெடி பண்ணியும் அசையாம உக்காந்திருப்பாங்க. இந்தப் பக்கம் கேமராமேன், செட்டே அதிர்ற அளவுக்கு விழுந்து விழுந்து சிரிச்சுட்டிருப்பார். அந்த காமெடிக் கூட்டாளிகளைப் பார்க்கிறப்பதான் எனக்குப் பாவமா இருக்கும்!''

''வீட்ல உங்க ஷோவுக்கு என்ன ரியாக்ஷன்?''

''என் புரோகிராம் வந்தா பையன் சேனல் மாத்திடுவான். கேட்டா, 'தினமும் பக்கத்துலயே பார்க்கிற முகம்தானே. டி.வி-யில வர்றதால தினமும் கைகொடுத்துப் பாராட்டி 'ஹேய்... சூப்பரப்பு’னு சொல்லச் சொல்றீங்களா?’னு கேப்பான்!''

''நான் ஏன் நடிகையாகணும்?''

''சூப்பர் சிங்கர்ல சூப்பரா காம்பியர் பண்றீங்களே..?''

''நீங்களும் என்னைக் கலாய்க்கலையே! நிறைய சேனல்கள்ல வி.ஜே-வா இருந்திருக்கேன். அப்போதான் ஒல்லிபெல்லி ஷோவுக்கான அழைப்பு வந்தது. நான் பப்ளியா இருந்ததால், காம்பியரிங் பண்ணக் கூப்பிடுறாங்களா... இல்லை நிகழ்ச்சியில் போட்டியாளரா கலந்துக்க கூப்பிடுறாங்களானு குழப்பம். நல்லவேளை... காம்பியராத்தான் கூப்பிட்டிருந்தாங்க. அங்கே நான் பண்ண சேட்டைதான் 'சூப்பர் சிங்கர்’ வாய்ப்பு கொடுத்திருக்கு. இங்கே வந்தும் சேட்டையை ஆரம்பிச்சுட்டோம்ல. 'வின்னர்ஸுக்கு வீடு கொடுக்கிறீங்க. எங்களுக்கு ஒரு பால்கனியாவது கொடுங்கக் கூடாதா?’னு கேட்டேன். அதைப் பரிசீலிச்சு இப்போ 5 லட்சம் கொடுக்கிறதா சொல்லியிருக்காங்க!''

''அடுத்து என்ன... சினிமாவா?''

''ஹை... அஸ்க்கு புஸ்க்கு... என்னை சூப்பர் ஸ்லிம் ஆக்க ஐடியா பண்றீங்களா? நான் சிக்க மாட்டேன்ல. நடிகைன்னா உடம்பை ஸ்லிம்மா வெச்சுக்கணும். ஆசைப்படுறதைச் சாப்பிட்டு ஜாலியா இருக்க முடியாது. அப்புறம் ஸ்பாட்ல நம்ம ஷாட் வரக் காத்துட்டிருக்கணும். இதெல்லாம் நமக்கு செட் ஆகாதுப்பா!''

''எனக்கு யார் வொய்ஃப்?''

''நீங்களும் மகேஷும் வெளியே போனாக்கூட ஜோடியாத்தான் போறீங்களாமே?''

''சம்சாரத்தைக் கூட்டிட்டு ஏதாவது விசேஷத்துக்குப் போனா, 'எங்க மகேஷ் வரலையா?’னு கேட்கிறாங்க. வீட்ல இவனால தினமும் சண்டை... 'நான் வொய்ஃபா இல்லை... அவரா?’னு!''

''மகேஷுக்கு ஏதாவது சவால் விடணும்னா,  என்னன்னு விடுவீங்க?''

''அவர் ஷோவுக்குக் கிளம்பும்போது அவரோட பொண்ணைச் சமாதானப்படுத்திட்டு வரணும். இதான் அவருக்கான டாஸ்க். இவர் எவ்வளவு கேள்வி கேட்கிறாரோ, அதைவிட அதிகமா அவர் பொண்ணு கேள்வி கேட்டு வெளுக்கும்!''

''உலகத்துலயே அழகான ஆண்...''

''உங்களுக்கும் பாலாஜிக்கும் செம கெமிஸ்ட்ரியா இருக்கே?''

''ஆமா... உலகத்துலயே ரெண்டு ஆண்களுக்கு இடையே பிரமாதமான கெமிஸ்ட்ரினா, அது  எனக்கும் மச்சி பாலாஜிக்கும்தான். இதை நான் எந்த சர்வதேச கோர்ட்லயும் வந்து சத்தம்போட்டுச் சொல்வேன்!''

''உங்க ஷோல வர்ற மாதிரி மத்த 'வி.ஜே’-க்களுக்கு ஏதாவது சவால் விடணும்னா, என்னன்னு விடுவீங்க?''

''கோபிநாத் அண்ணன் எப்பவும் உறுமிட்டே இருப்பார். அவரைக் கொஞ்சம் சாஃப்ட்டா பேசச் சொல்லலாம். மா.கா.பா-வை 'அட்ரா சக்க’ ரவுண்டுல நிக்கவெச்சுரலாம். அடிக்கிற அடியில் வலி தாங்காம செந்தமிழ்ச் சொற்களா கொட்ட வாய்ப்பு இருக்கு. இந்த பிரியங்கா புள்ள இப்ப வரைக்கும் அது லூஸா... இல்ல அப்படி நடிக்குதான்னு சேனலுக்கே தெரியலை. 'நல்லா இருக்கியா?’னு கேட்டாலே, நாப்பது நிமிஷம் பேசுவாங்க பாவனா. அவங்க காம்பியர் ஆன கதையை நாலே வரிகள்ல சுருக்கமாச் சொல்லச் சொல்லலாம். அவங்களால முடியவே முடியாது!''

நீங்க எப்படி பீல் பண்றீங்க