ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

னந்த விகடன் வாசகர்களுக்கு வணக்கம். 

நான் 'கல்யாண மாலை’ மோகன்...

திருமணம் என்பது, ஆயிரம் தேவதூதர்கள் ஆசீர்வதிக்கும் ஓர் இனிய தருணம். பார்த்துப் பார்த்து வளர்த்த பெற்றோர், நெருக்கமாகப் பழகிய நண்பர்களைத் தாண்டி புத்தம் புதிதாக ஓர் உறவை ஏற்று, வாழ்க்கைப் பயணத்தை அந்த உறவுடன் தொடரும் தருணம்தான் திருமணம். ஆனால், என்னதான் பார்த்துப் பார்த்துச் செய்தாலும் கல்யாணம் முடிந்த சில மாதங்களிலேயே, புதுமணத் தம்பதிகளிடம் மன வேற்றுமை உண்டாகிவிடுகிறது. இதில் காதல் திருமணம், நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்ற வேறுபாடுகள் இல்லை. கல்யாணம் முடிந்த சில வாரங்களிலேயே அதிசயத்தை எதிர்பார்க்கிறார்கள் இளைஞர்கள். ஆனால், அப்படி எதுவும் நடக்காமல் சின்னச் சின்ன மனச் சங்கடம் உருவாகும்போதுதான், பெரிய ஏமாற்றத்துக்கு ஆளாகிறார்கள். கோபம் தாங்காமல், உடனே வீட்டுப் பெரியவர்களிடம் குற்றப்பத்திரிகை வாசிக்கிறார்கள். இவை எல்லாம் தேவையே இல்லை. ஒரே ஒரு சிறிய நல்ல பழக்கம், எவ்வளவு பெரிய மனச் சங்கடத்தையும் தீர்த்துவிடும். அது என்ன?

'திருமணத்தை லட்சக்கணக்கில் செலவழித்து பிரமாண்டமாக நடத்த வேண்டும்’ என நினைக்கிறார்கள்.  பொருளாதார வசதி இருந்தால், தாராளமாக நடத்தலாம். ஆனால், கடன் வாங்கி அவ்வளவு பிரமாண்டம் காட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை. சக்திக்கு மீறி ஆடம்பரமான கல்யாண மண்டபம், டாம்பீகமான சீர் செனத்தி... எனப் பகட்டாகத் திருமணம் செய்வதன் தேவை என்ன? மணமகனுக்கும் மணப்பெண்ணுக்குமான மனப் பொருத்தம் நல்ல முறையில் அமைந்துவிட்டாலே, அந்த ஜிகினா வேலைகளுக்கு அங்கு இடம் இல்லை. என் அனுபவத்தில் கிடைத்த சுவாரஸ்யமான சில விஷயங்களைச் சொல்கிறேன்... உங்களுக்கு நிச்சயம் பயன்படும்.

இன்றைய இளைஞர்கள் மிகச் சிறிய வயதிலேயே காதலிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். அதில் வெகு சிலர்தான் காதலித்தவர்களையே கரம்பிடிக்கிறார்கள். அப்படி ஒன்று சேர்ந்தவர்களும் கல்யாணத்துக்குப் பிறகு அதுவரை இல்லாத அளவுக்குச் சண்டை போடுகிறார்கள். ஏன்? 'தங்களின் காதல், திருமணத்தில் முடியுமா... அதற்கான சாத்தியங்கள் உள்ளனவா?’ என்பது பற்றி காதலர்கள் பலர் யோசிப்பதே இல்லை. அப்படியே       காதல்... திருமணத்தில் முடிந்தாலும், அதன் பிறகான வாழ்க்கையைப் பற்றி அவர்கள் திட்டமிடுவதும் இல்லை. ஆகவேதான் இப்படியான பிரச்னைகள்... சிக்கல்கள். இந்த இரண்டு தருணங்களின்போதும் நாம் என்ன செய்ய வேண்டும்?

11-06-15 முதல் 17-06-15 வரை 044-66802911**என்ற எண்ணுக்கு அழையுங்கள். வாழ்க்கையில் வளம், நலம் சேர்ப்போம்!

அன்புடன்,

மோகன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!