'கிச்சன் கில்லர்கள்’ !

கேன் வாட்டர் முதல் பால் பவுடர் வரைபாரதி தம்பி, ஓவியம்:எம்.ஜெயசூர்யா

மேகி நூடுல்ஸில் நச்சு கலந்திருக்கிறது... அதற்குத் தடை. ஆதரிக்கவேண்டிய ஆரோக்கிய நடவடிக்கைதான். ஆனால், நூடுல்ஸில் மட்டும்தான் நச்சு இருக்கிறதா? உங்கள் சமையலறைக்குச் சென்று பார்வையை ஓடவிடுங்கள். உடலுக்குத் தீங்கு இழைக்கக்கூடிய ஒரு டஜன் உணவுகளைக் கணக்கிட முடியும். உங்கள் குழந்தையின் ஸ்நாக்ஸ் டப்பாவைத் திறந்து பாருங்கள். 'குழந்தை நல்லா சாப்பிடுறா’ என நீங்கள் அடிக்கடி கொடுக்கும் சாக்லேட்டும் பிஸ்கட்டும் கேடு தரும் உணவுப் பட்டியலில் முன்வரிசையில் இருக்கும். மேகிக்கு போகி கொண்டாடுவதைப்போல, நாம் விலக்கி வைக்கவேண்டிய நச்சு உணவுப்பொருட்களின் பட்டியல் மிகப் பெரிது! 

இப்படி ரெடிமேட் இட்லி மாவு தொடங்கி, சிக்கன் 65 வரை உணவுப்பொருள் குறித்த உண்மைகளை நெருங்கிப் பார்த்தால், நாம் ஒரு வேளை உணவைக்கூட அசூயை இல்லாமல் உண்ண முடியாது. இந்த உதாரணத்தைப் படியுங்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!