வீடு எங்கும் டெடிபியர்!

பா.ஜான்ஸன், படங்கள்: கே.ராஜசேகரன்

''சின்ன வயசுல இருந்தே நாங்க ஃபேமிலி ஃப்ரெண்ட்ஸ். இவங்க வீட்டுக்கு நாங்க போறது... எங்க வீட்டுக்கு இவங்க வர்றதுனு ரொம்ப க்ளோஸ். அப்புறமா நான் நடிக்க ஆரம்பிச்சுட்டேன், இவங்க டி.வி-யில் ஆங்கரிங் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. நாங்க மீட் பண்ணிக்கிறதே இல்லாமப்போச்சு. 'சித்து 2’ பட புரொமோஷனுக்காக 'மானாட மயிலாட’ ஷோவுக்குப் போனேன். அதுக்குப் பிறகு ரகு மாஸ்டருக்காக ஒரு ஷோ. அதில் என்னை ஆடச் சொல்லிக் கேட்டு கீர்த்தி போன் பண்ணினாங்க. நானும் ஓ.கே சொல்லிட்டேன். ஆனால், எனக்கு ஜோடியா ஆடவேண்டியவங்க வர முடியாத சூழல். 'கீர்த்தி... நீ என் ஃப்ரெண்ட்தானே, நீயே வந்து ஆடு’னு சொன்னேன். உடனே ஓ.கே சொல்லிட்டாங்க. அப்போதான், 'இவங்களை நமக்கு நல்லாத் தெரியும். ரொம்ப நல்ல ஃப்ரெண்ட். இவங்க நம்ம வாழ்க்கைத்துணையா வந்தா நல்லாயிருக்குமே’னு தோணுச்சு. உடனே அவங்ககிட்ட கேட்டுட்டேன்'' என சாந்தனு ஜில் நினைவுகளை மீட்ட... ''இரு... இரு... அதுக்குப் பிறகு நடந்ததை நான் சொல்றேன்'' எனப் புன்னகையுடன் தொடர்ந்தார் கீர்த்தி. 

''இவர் டக்குனு அப்படிக் கேட்டதும் எனக்கு என்ன சொல்றதுனு தெரியலை. 'நீங்க அம்மா அப்பாகிட்ட பேசுங்க’னு சொல்லிட்டேன். ஏன்னா, எனக்கும் இவரை ரொம்பப் பிடிக்கும்'' எனக் கலகலக்கிறார் கீர்த்தி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்