"கேக் கொடுத்து கவுத்துட்டார் பாஸ்!”

ஆ.விஜயானந்த், படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

''எங்க காதலுக்கு வயசு 15. ஒரு கேக்கைக் கொடுத்து இவர் என்னைக் கவுத்துட்டார் பாஸ்'' என தன் காதல் கணவர் ஃபெரோஸைப் பார்த்துக் கண்ணடிக்கிற விஜயலட்சுமி, 'பண்டிகை’ படத்தின் மூலம் தன் காதல் கணவருக்காகத் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார். ஃபெரோஸ், இயக்குநர் அறிவழகனிடம் சினிமா கற்றவர். 

''என் ஸ்கூல் ஃப்ரெண்ட் ஒருத்தியோட பிறந்த நாள் விழாவுக்கு வந்த ஃபெரோஸ், விழா முடியும் வரைக்கும் ஒரு கேக்கை கையில வெச்சுக்கிட்டு, 'சாப்பிடு சாப்பிடு’னு என்னைத் துரத்திட்டே இருந்தார். எந்தப் பக்கம் திரும்பினாலும் கேக்கும் கையுமா நின்னுக்கிட்டு இருந்தார். கேக் மீது பரிதாபப்பட்டு நான் வாங்கிக்கிட்டேன்'' எனக் கலகலக்கிறார் விஜயலட்சுமி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்