ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

படம்: கே.ராஜசேகரன்

விகடன் வாசகர்களுக்கு வணக்கம். நான் எழுத்தாளர் இமையம் பேசுகிறேன்... 

மனித இனத்தின் மிகப் பெரிய பலம், ஆற்றல், உத்வேகம்... எல்லாம் நம்பிக்கைதான். இன்று நாம் அனுபவிக்கிற எல்லா கண்டுபிடிப்புகளும் முன்னேற்றங்களும் யாரோ ஒருவரின் நம்பிக்கையால், முயற்சியால் உண்டானவை. 'முடியும்’, 'சாத்தியம்’ என்ற நம்பிக்கைதான் இன்று நாம் அனுபவிக்கிற அனைத்து நன்மைகளுக்கும் ஆதாரப் புள்ளி. உழைப்பு எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு நம்பிக்கையும் முக்கியம். நம்பிக்கையை நமக்குள் விதைத்து, வளர்த்தெடுத்து இந்தச் சமூக வளர்ச்சிக்கு உதவியாக இருப்பது எப்படி? உதாரணங்களோடு சொல்கிறேன்.

மனித சமூகத்தில் மதிக்கத்தக்க, கவனிக்கத்தக்க நபராக இருப்பவர்கள் எழுத்தாளர்கள். ஏனெனில், அவர்களே மொழியை உருவாக்குகிறார்கள்; புதுப்பிக்கிறார்கள்; வளர்த்தெடுக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக அடுத்த தலைமுறைக்கான கல்வியை உருவாக்குகிறார்கள். இப்படிப்பட்ட எழுத்தாளர்களுக்கு எழுத்தையும் தாண்டி இருக்கும் முக்கியமான சமூகப் பங்கு, என்ன தெரியுமா?

பிரெஞ்சு இலக்கியத்தில் தவிர்க்க இயலாத பெயர் விக்தோர் ஹ்யூகோ. 1829-ம் ஆண்டில் அவர் எழுதிய 'தி லாஸ்ட் டே ஆஃப் எ கண்டம்டு மேன்’ புத்தகத்தை தமிழில், 'மரண தண்டனைக் கைதியின் இறுதி நாள்’ என்ற பெயரில் குமரவேலன் மொழிபெயர்த்திருக்கிறார். சராசரிக் குடும்ப வாழ்வில் இருக்கிற ஒரு மனிதன், அவனை நம்பி மனைவி, இரு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். கவனக்குறைவால் செய்த குற்றத்துக்காக அவன் மரண தண்டனைக்கு ஆளாகிறான். நீதிமன்ற விசாரணை முடிந்து, விடிந்தால் தூக்கு என்ற நிலையில், அவனின் அந்த இரவுப் பொழுது, வேதனைகள், மனவோட்டங்களைப் பேசுகிறது இந்தக் குறுநாவல். அது என் மனதில் ஏற்படுத்திய அதிர்வுகளை உங்களுக்குள் கடத்தவா?

சமீபத்தில் என்னைப் பாதித்த விஷயம், கர்நாடகாவைச் சேர்ந்த எழுத்தாளர் கல்புர்கி சுட்டுக் கொல்லப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலத்திலும் இரு எழுத்தாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். இந்தியா முழுக்க எழுத்தாளர்கள் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள்; அச்சுறுத்தப்படுகிறார்கள். பாகிஸ்தான் எழுத்தாளர் ஒருவரின் புத்தகத்தை இந்தியாவில் வெளியிட நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர் முகத்தில் கறுப்பு மை வீசினார்கள். தொடர்ந்து எழுத்தாளர்களும் கலைஞர்களும் குறிவைத்துத் தாக்கப்படுவது ஏன் தெரியுமா?

5-11-15 முதல் 11-11-15 வரை 044-66802911 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். நிறையப் பேசலாம்...

அன்புடன்,

இமையம்

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick