ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

விகடன் வாசகர்களுக்கு வணக்கம். நான் திரைப்பட வசனகர்த்தா, இயக்குநர் விஜி பேசுகிறேன்... 

நான் இயக்கிய முதல் படம் 'அள்ளித்தந்த வானம்’. பிறகு 'பாலா’ தொடங்கி 'மொழி’, '36 வயதினிலே’ வரை பல படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறேன். இடையில் 'வெள்ளித்திரை’ என்ற படத்தை இயக்கினேன். இதுதான் என் பயணம். சினிமாவில் நடிகர்கள், கேமரா, காஸ்ட்யூம் எல்லாமே எப்போதும் இருக்கிற விஷயங்கள்தான். ஆனால், அவர்கள் எப்போதும் தேடுவது கதை. அது, எல்லோரிடமும் இருக்கும். அதை சுவாரஸ்யமாகச் சொல்வதில்தான் அதன் வெற்றி இருக்கிறது.

பழைய படங்களை நாம் எப்போதும் நினைவுகூர்வதற்கு, இரண்டே விஷயங்கள்தான் முக்கியமான காரணம். ஒன்று பாடல்கள்; இரண்டாவது வசனம். வசனத்துக்காகவே கொண்டாடப்பட்ட பல படங்கள் தமிழ் சினிமாவில் உண்டு. பட வெற்றிக்கு, வசனத்தின் பெரும்பங்கு பற்றி பல உதாரணங்களை என்னால் சொல்ல முடியும். அப்படிச் சில படங்கள் பற்றிச் சொல்கிறேன்.

சினிமாவை, இன்று எல்லோரும் வர்த்தகமாகப் பார்க்கிறார்கள். ஆனால், அதைக் கலைவடிவமாக மட்டும் பார்த்த காலம் ஒன்று இருந்தது. அந்தக் காலத்தில்தான் படைப்பாளிகள், கலையின் உன்னதம் நோக்கி நகர்ந்தார்கள். கே.பாலசந்தரின் 'கவிதாலயா’, ஸ்ரீதரின் 'சித்ராலயா’ போன்ற தயாரிப்பு நிறுவனங்கள் படைப்பாளிகளை மையமாக வைத்து உருவாகின.

டி.ஆர்.ராமண்ணா, பி.ஆர்.பந்துலு, ஏ.பி.நாகராஜன்... போன்றோர் சொந்தமாகப் படங்கள் எடுத்தார்கள். ஆனால், சினிமா வியாபாரமான பிறகு உண்டான விளைவுகள் என்ன தெரியுமா?

எனக்கு சோதிடத்தில் நம்பிக்கை உண்டு. நிறையத் தடவை சோதிடம் பார்த்திருக்கிறேன். நம்மைப் பற்றி யாராவது ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்லும்போது ஒரு தெம்பு வரும். பாரதியார், 'சோதிடம்தன்னை இகழ்’ எனச் சொன்னார். 'சோதிடம் ஒரு மனோவியாதி’ எனச் சொன்னார் விவேகானந்தர். அதைச் சொல்ல, அவர்களுக்கு முழுத் தகுதி உண்டு. ஆனால், நான் சாதாரணன். என் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு போய்க் காட்டி, 'உலகத்தில் எல்லோரும் நல்லா இருப்பார்களா?’ எனக் கேட்க மாட்டேன். நான், என் குடும்பம், அதன் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை வளப்படுத்தவே நான் சோதிடம் பார்க்கிறேன். அந்த நம்பிக்கை எதன் அடிப்படையிலானது?

12-11-15 முதல் 18-11-15 வரை 044-66802911* என்ற எண்ணில் அழையுங்கள். ஆத்மார்த்தமாகப் பேசுவோம்!

அன்புடன்,

விஜி

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick