இன்பாக்ஸ்

அமெரிக்கா, உள்நாட்டுக் கலவரங்களால் பிரிவினை ஏற்பட்டு பல பாகங்களாகப் பிரிகிறது. அதில் 'பனெம்’ நாடு 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு 'டிஸ்ட்ரிக்ட் 1 முதல்  12’ வரை பெயரிடுகின்றனர். இந்த 12 டிஸ்ட்ரிக்ட்டுகளில் இருந்தும் தலா இருவர் (ஓர் ஆண், ஒரு பெண்) என 24 பேரைத் தேர்வுசெய்து, ஒரு காட்டுக்குள் இறக்கிவிடுவார்கள். இவர்கள் ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டு அடுத்தவரைக் கொலை செய்ய வேண்டும். முடிவில் உயிரோடு வெளியே வரும் அந்த ஒருவர், வெற்றியாளர். இந்த ஆபத்து விளையாட்டைப் பற்றிய திரைப்படம்தான் 'தி ஹங்கர் கேம்ஸ்’. இதன் முதல் மூன்று பாகங்கள் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடையே ஏகோபித்த லைக்ஸ் குவித்தன. இப்போது  நான்காம் பாகம் வெளியாக இருக்கிறது. சூசன்னா காலின்ஸ் எழுதிய புத்தகத்தைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படங்களின் நாயகி ஜெனிஃபர் லாரன்ஸ். 'இதுதான் கடைசி பாகம்’ என அறிவிக்கப்பட, சோகத்தில் இருக்கிறார்கள் ஜெனிஃபர் ரசிகர்கள். இதெல்லாம் ஒரு விளையாட்டாம்மா? 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்