ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

விகடன் வாசகர்களுக்கு வணக்கம். நான் 'இன்ஸ்பையரிங்’ இளங்கோ பேசுகிறேன்... 

மொழியை 'ஆளுமையின் கண்ணாடி’ என்பார்கள். ஒருவர், தன் தாய்மொழியைப் பிழையின்றிப் பேச வேண்டும். அப்படிப் பேச முடியாத எவராலும் பிற மொழியில் ஆளுமையோடு இருக்க முடியாது. என் தனிப்பட்ட வாழ்க்கையில் மனிதர்களை நான் புரிந்துகொள்வது அவர்கள் பேசுகிற-பேசாத வார்த்தைகளில் இருந்துதான். மொழியை சரியாகப் பயன்படுத்தும்போது, அது நம்மை எப்படி எல்லாம் நல்வழிப்படுத்தும் தெரியுமா?

நேர்மறைச் சிந்தனையாளர்கள், சிக்கல்களை எப்போதும் சவால்களாகப் பார்ப்பார்கள். 'அது என்னை நிரூபிக்கக் கிடைத்த வாய்ப்பு’ என்பார்கள். ஆனால், எதிர்மறைச் சிந்தனையாளர்கள் சவால்களைக்கூட சிக்கல் ஆக்கிக்கொள்வார்கள். எதிர்மறைச் சிந்தனை, தாழ்வுமனப்பான்மை, தேவையற்ற பயம்... இவையே ஒரு மனிதனைப் பின்னோக்கி இழுப்பவை. இவற்றில் இருந்து விடுபட, சில மனப் பயிற்சிகள் இருக்கின்றன. அவை என்னென்ன?

நாம், நமது புறப்பார்வையால் மட்டுமே இந்தச் சமூகத்தைப் பார்க்கிறோம்; அகப்பார்வையாலும் பார்க்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அதுதான் நமக்கும், நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கும், சமூகத்துக்கும் நலம் பயக்கும். சரி... அது என்ன அகப்பார்வை? என் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தில் இருந்தே இதற்கு பதில் சொல்கிறேன்.

நம் பிள்ளைகளுக்குள் நல்ல கனவுகளை விதைக்க வேண்டுமே தவிர, திணிக்கக் கூடாது. இதற்கு சுகுமாரும் அவரது மகன் ஹரிஷ§ம் உண்மை உதாரணங்கள். ஹரிஷ் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது அவரது பெற்றோர் விவாகரத்து பெற்றனர். அப்பா சுகுமார், வேறு திருமணம் செய்துகொள்ளவில்லை. மகனை, பரிவு பாசத்தோடு வளர்த்தார். ஹரிஷ் வளர்ந்து ஒரு தனியார் கல்லூரியில் சேர்ந்தார். ஒரு செமஸ்டர் தேர்வு எழுதி நல்ல மதிப்பெண்கள் பெற்றபோதும், 'இனி நான் படிக்கப்போவது இல்லை’ எனச் சொல்லிவிட்டார். அப்பா எவ்வளவு சொல்லியும் ஹரிஷின் முடிவில் மாற்றம் இல்லை. இறுதியில் ஹரிஷை என்னிடம் அழைத்து வந்தார். நான் ஹரிஷிடம் பேசப் பேச ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்தது. ஹரிஷ§க்கு தன் எதிர்காலம் குறித்த தெளிவு இல்லை. இதை யார் வழங்கி இருக்க வேண்டும்... அப்பாதானே! பாசத்தோடு நேசத்தையும் சேர்த்து ஊட்டி மகனை வளர்த்தவர், அவருக்குள் நல்ல கனவையும் சேர்த்து வளர்த்திருக்க வேண்டும் அல்லவா? கடைசியில் ஹரிஷ் கல்லூரிக்குச் சென்றார். எப்படி?

இன்பத்துக்கும் பேரின்பத்துக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. ஒருவர் அழுதால், அது சிலருக்கு இன்பம். நகைச்சுவை நடிகர் அடிவாங்கும்போது, அதைப் பார்த்துச் சிரிப்பவர்களுக்கு அதுதான் இன்பம். பிடித்த இசையைக் கேட்டால் இன்பம். அழகான பெண்ணை அல்லது ஆணைப் பார்த்தால் இன்பம். ஆனால், இவை எல்லாம் எப்போது பேரின்பத் தகுதியை அடைகின்றன தெரியுமா? அந்த இன்பம் நல்ல முறையில் துய்க்கப்பட்டு, நமக்கும் நம்மைச் சுற்றி உள்ளோருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கும்போதுதான். என் பேச்சில் இருந்தே இதற்கு உதாரணங்கள் சொல்கிறேன்.

19-11-15 முதல் 25-11-15 வரை 044-66802911 என்ற எண்ணில் அழையுங்கள். நல்லவை பேசுவோம்!

அன்புடன்,

இளங்கோ

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick