ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

விகடன் வாசகர்களுக்கு எழுத்தாளர் நிர்மலா கொற்றவையின் வணக்கம்... 

சமீபகாலமாக, பெண் விடுதலையைப் பற்றி அதிகம் பேசுகிறோம். ஆனால், நிஜத்தில் பெண் விடுதலை என்பது என்ன? பெண் என்பதாலேயே மறுக்கப்படும், விலக்கப்படும் நடைமுறைகளை மாற்றி அமைப்பதுதான் 'பெண் விடுதலை’யின் அடிப்படை. பெண், ஆணைச் சார்ந்திருக்கும் நிலையை மாற்றுவது, பெண் உடல் பற்றிய கருத்தியல்களை மாற்றியமைத்துப் பாதுகாப்பாக வாழும் உரிமையை நிலைநாட்டுவது... இவைதான் பெண் விடுதலையை அமல்படுத்த நாம் செய்யவேண்டியவை. ஆனால், இதை நம்மவர்கள் எப்படிப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்?

எழுத்தாளரின் மிக அடிப்படை அத்தியாவசிய குணம்... வாசிப்பு. பரந்துபட்ட வாசிப்பு என்பது ஒவ்வோர் எழுத்தாளரின் பொறுப்பும்கூட. ஆகவே, நான் பெண் விடுதலை பற்றி எழுதுவதற்காக அது சார்ந்து நிறைய வாசிக்கிறேன். அப்படி நான் வாசித்ததில் கார்ல் மார்க்ஸ் எழுதிய நூல்கள் பலவும் என்னை அதிசயிக்கச் செய்தவை. அதிலும் குறிப்பாக,

‘Economic and Philosophic Manuscripts of 1844’  எனும் புத்தகம் என்னை வியப்பின் உச்சத்துக்கே அழைத்துச் சென்றது. அந்த ஆச்சர்யங்கள் பற்றியும் நான் வியக்கும் இன்னொரு மார்க்சியவாதி பற்றியும் பகிர்ந்துகொள்கிறேன்.

'தன்னம்பிக்கை’யை வளர்த்துக்கொள்ள, கண்டிப்பாக ஒவ்வொருவரும் சமூக விஞ்ஞான அறிவை நிச்சயம் வளர்த்துக்கொள்ள வேண்டும். அறிவு வளரும்போதுதான் தன்னம்பிக்கையும் வளரும். வெறுமனே, 'நாம் சாதிக்கப் பிறந்தவர்கள். நமக்குள் பேராற்றல் இருக்கிறது. நம்மால் முடியாதது எதுவுமே இல்லை!’ போன்ற வெற்று வார்த்தைகளைப் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை. ஏன் தெரியுமா?

அனைத்து அம்சங்களிலும் நல்லது கெட்டது இருப்பதுபோல, சமூக வலைதளங்களிலும் இரண்டும் கலந்தே இருக்கின்றன. தங்கள் கருத்தைப் பதிவுசெய்ய வாய்ப்பு கிடைக்காமல் தவித்த மாற்றுக்கருத்து உடையவர்களுக்கும், ஒடுக்கப்பட்ட சமூகத்துக்காகக் குரல் கொடுப்பவர்களுக்கும் சமூக வலைதளங்கள் பெரும் வரப்பிரசாதம். ஆனால், அதன் பிரச்னை என்னவென்றால், 'ஒரு சமூகம் என்பது, முதிர்ச்சியற்ற மனநிலையில்தான் இருக்கும்’ என்பது போன்ற தோற்றப் பிழை சமூக வலைதளங்களில் பிரதிபலிப்பதுதான். 'கருத்துச் சுதந்திரம்’ எனும் வரம் தரும் அதே நேரம், நம் நேரத்தை நமக்கே தெரியாமல் திருடிக்கொண்டும் இருக்கின்றன சமூக வலைதளங்கள். அது பற்றிய அறிவும் தெளிவும் பெறவேண்டியது அவசியம்.

22-10-15 முதல் 28-10-15 வரை 044-66802911 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். அறிவோம்... தெளிவோம்!

அன்புடன்,

நிர்மலா கொற்றவை.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick