VIKATAN NOW

ச்சில் மட்டும் அல்ல, இணையத்திலும் விகடன்தான் கிங். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு செய்திகளை புதுப்புதுப் பரிமாணங்களில் தருகிற அசத்தல் கட்டுரைகள், நம் இணையதளத்தில் வெளியாகின்றன. சிரிக்கவும் சிந்திக்கவும்வைக்கும் வீடியோக்கள் யூடியூப் சேனலிலும் வெளியாகின்றன. சமூக வலைதளங்களிலும் மக்களுடன் உரையாடுகிறோம். விகடனின் இணையப் பக்கங்களில் என்னென்ன ஸ்பெஷல்? ஆன்லைன் அட்டகாசங்களின் தொகுப்பு இங்கே...

விஜயகாந்த் ஸ்பெஷல்

விஜயகாந்த், இதுவரை என்னவெல்லாம் செய்திருக்கிறார்... எப்படியெல்லாம் எதிர்கட்சிகளைப் பந்தாடியிருக்கிறார், தன் கட்சித் தொண்டர்களைக் கும்மி எடுத்திருக்கிறார் என்பதை எல்லாம் தொகுப்பாக, முழுக்க முழுக்கச் சிரித்துக்கொண்டே விகடன் யூடியூப் சேனலின் வீடியோ தொகுப்பில் ஜாலியாகக் காணலாம். கேப்டனின் சேட்டைகள் அடங்கிய மொத்தத் தொகுப்பு.  - http://goo.gl/41XyCT

நடிகர் கிஷோரின் இன்னொரு முகம்

``இப்போது விவசாயம் செய்வது ஃபேஷன் ஆகிவிட்டது அல்லவா...நீங்களும் அப்படித்தானா?'' என்று கேட்டவுடன், கிஷோரிடம் இருந்து உடனடியாக பதில் வருகிறது. “இல்லை. அந்தப் பட்டியலில் என்னைச் சேர்க்க முடியாது. நான் கையில் ஒரு ரூபாய்கூட இல்லாத காலத்திலேயே, விவசாயம் செய்ய ஆசைப்பட்டிருக்கிறேன்; கடனுக்காக சில வங்கிகளையும் அணுகியிருக்கிறேன். ஆனால், அவர்கள் கடன் தர மறுத்துவிட்டார்கள். ஒருவேளை கடன் தந்திருந்தால், இந்நேரம் விவசாயம் மட்டுமே என் வாழ்வாக இருந்திருக்கும்” என்கிறார் `ஆடுகளம்’ கிஷோர். இந்தப் பேட்டியை விரிவாக வாசிக்க... http://goo.gl/qSucLP

சிறுவாணியின் கதை

கோவை நகரத்துக்கு, சிறுவாணி நீர் எப்படி தாகம் தணிக்கத் தொடங்கியது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா? அதற்காக தன் உயிரையும் துச்சமாக மதித்து ஆய்வுகள் நடத்திய எஸ்.பி.நரசிம்மலு நாயுடுவைத் தெரியுமா? சிறுவாணி நீர், கோவை வந்த வரலாறு விகடன் இணையதளத்தில்  - http://goo.gl/KRC0yY

கபாலி சீக்ரெட்ஸ்

‘கபாலி’ படத்தின் ஒளிப்பதிவாளர் ஜி.முரளி. தன் மூன்றாவது படத்திலேயே ரஜினியைப் படம் பிடித்த இந்த 38 வயது இளைஞர் சொல்லும் `கபாலி' படம் குறித்த சுவாரஸ்யத் தகவல்களின் தொகுப்பு. இங்கே  - http://goo.gl/iolfeM

இவர்தான் எங்க வேட்பாளர்!

சென்ற வார ஆனந்த விகடனில் `யார் என் வேட்பாளர்?' என்ற கட்டுரை வெளியானது. அதை இணையத்தில் பகிர்ந்திருந்தோம். கூடவே சமூக வலைதளங்களில் #WhoisMyCandidate என்ற ஹேஷ்டேகில் ஒரு வேட்பாளரிடம் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன என்பதை பதிவுசெய்யக் கேட்டிருந்தோம். ஆர்வத்துடன் பதில் அளித்த நெட்டிசன்ஸ், அடுத்த ஒரு மணி நேரத்தில் ட்விட்களும் ஸ்டேட்டஸ்களுமாகப் போட்டுக் குவிக்க, அந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது. ஆர்வத்துடன் கலந்துகொண்ட வாசகர்களுக்குப் பூங்கொத்து. அதில் சில கருத்துகள் இங்கே...

twitter.com/sumotac: #whoismycandidate கல்வி, மருத்துவம், குடிநீர், சாலை - இவை விலை இல்லாமல் கிடைக்க வேண்டும்.

facebook.com/rajusuganthan: ஒரு சாமானியன், ஒரு சாமானியனின் தேவைகளை அறிந்தவன். இலவசங்கள், விலை இல்லா பொருட்கள் வழங்காதவன்! ‪#‎whoismycandidate‬

twitter.com/riyazdentist: தேர்தலுக்குப் பின்னர் `who is my MLA?' என யோசிக்கும் அளவுக்கு தொகுதிப் பக்கமே வராத ஒருவராக இருக்கக் கூடாது. #WhoIsMyCandidate

twitter.com/aedwinp: மாதத்துக்கு ஒருமுறை பத்திரிகையாளர் சந்திப்பும், இரு மாதங்களுக்கு ஒருமுறை தொகுதி முழுவதும் நேரில் ஆய்வுசெய்யவும் வேண்டும் #whoismycandidate

twitter.com/THAMIZHTHAMIZHA:  சாதாரண குடிமகனும் எளிதாகத் தொடர்புகொள்ள வேண்டும் #whoismycandidate

அரசியல் தெரிஞ்சுக்கலாம்!

வாராவாரம் `JV breaks' என்ற தலைப்பில் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளை சுவாரஸ்யமாக விமர்சிக்கிறார்  ப.திருமாவேலன். நாம் தெரிந்துகொள்ள விரும்பும் அன்றாட அரசியலுக்குப் பின்னால் நடக்கும் அதிரடி சம்பவங்களின் தொகுப்பு. ஒவ்வொரு நாளும் பல ஆயிரம் பேரால் பார்க்கப்படும் இந்தத் தொடர் வீடியோவை நீங்களும் பாருங்க!  https://goo.gl/NkwuGu

Quick Links

ஹோண்டா சிபி யூனிகார்ன் 160 பைக் எப்படி இருக்கிறது...நம்பி வாங்கலாமா? மோட்டார் விகடன் தரும் இன்ஸ்டன்ட் விமர்சனம் - https://goo.gl/mrnmK2

குடி அல்லது வேறு காரணங்களால் சேதமடைந்த கல்லீரலை, மீண்டும் ஆரோக்கியமான நிலைக்கு மாற்றக்கூடிய வல்லமை உள்ள டானிக்கை வீட்டிலேயே எப்படித் தயாரிப்பது? - https://goo.gl/ma92aW

தர்மபுரியில் குப்பை மேடாகக் கிடந்த ஏரியைச் சுத்தப்படுத்திய இளைஞர்களின் வெற்றிக்கதை - https://goo.gl/d7Cm5d


இந்த இணைப்புகள் அனைத்தையும் ஒரே பக்கத்தில் காண... vikatan.com/now/av அல்லது இந்த QR CODE-ஐ ஸ்கேன் செய்யவும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick