கூட்டணிக் கணக்கு லாபம் யாருக்கு?

நா.சிபிச்சக்கரவர்த்தி, ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி

வ்வொரு கட்சிக்கும் ஒரு கூட்டணிக் கணக்கு இருக்கிறது. அது, கடந்த காலங்களில் அவர்கள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் உருவானது. அதனால்தான் பழம் நழுவி, பக்கத்து டம்ளர் பாலில் விழும் வரைக்கும் விஜயகாந்த்தை கூட்டணிக்கு அழைத்தார் கருணாநிதி. காலங்காலமாக அரசியல் கட்சிகளை அலையவிடும் இந்தக் கூட்டணிக் கணக்கில், அப்படி என்னதான் இருக்கிறது? தமிழ்நாட்டின் பிரதானக் கட்சிகளான தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் இதுவரை கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டதில் அது யாருக்கு சாதகம், யாருக்குப் பாதகம்? 1991-ம் ஆண்டு தேர்தல் தொடங்கி, கடந்த 25 ஆண்டுகாலத் தேர்தல் வரலாற்றில் கூட்டணிகள் பெற்ற வாக்குச் சதவிகித எண்களில் இருந்து உண்மைகளைத் தேடுவோம்.

(குறிப்பு:   இதில், தேசியக் கட்சிகள் மற்றும் மாநிலத்தில் உள்ள பெரிய கட்சிகளை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளோம். சிறிய கட்சிகளின் வாக்கு வங்கியை மற்றவை என்ற வகையில் சேர்த்துள்ளோம்.

  பல்வேறு சிறிய கட்சிகள், தி.மு.க., அ.தி.மு.க கூட்டணியில் சேரும்போது, உதயசூரியன், இரட்டை இலை சின்னங்களிலேயே போட்டியிட்டன. அவர்கள் வெற்றிபெற்றால், அது தி.மு.க., அ.தி.மு.க-வின் கணக்கில்தான் சேரும். தேர்தல் ஆணையம் அவ்வாறுதான் கணக்கிடுகிறது. இங்குள்ள டேட்டாவில் அந்தக் கணக்கே கருத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது.)

1991

இந்தத் தேர்தல் பிரசாரத்துக்காக வந்தபோதுதான் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைக்கு முன்னதாகவே அ.தி.மு.க மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டு இருந்தது. ராஜீவ் காந்தியின் மரணம், காங்கிரஸ் கட்சிக்கு மாபெரும் அனுதாப அலையை உருவாக்கியது. அது தேர்தலிலும் எதிரொலித்தது. அ.தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி, 225 தொகுதிகளில் வெற்றிபெற்றது. தமிழக அரசியல் வரலாற்றில் இந்தக் கூட்டணி பெற்ற வெற்றி, ஒரு பெஞ்ச் மார்க்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்