சமணர் மலை... பசுமை நடை... ஒரு வீக் எண்ட் விடுபடல்

அதிஷா, செ.சல்மான்

`வாங்களேன், ஒரு வாக் போயிட்டு வரலாம்' என யாராவது கூப்பிட்டால், எழுந்து நடக்கத்தான் தோன்றுகிறது. மாதம் முழுக்க ‘வெச்சு செய்யும்’ வேலைகளுக்கு நடுவில், வீக் எண்ட் விடுபடல்கள்தான் இனிய ஆசுவாசம். சினிமா, ஷாப்பிங், சண்டே லன்ச், ஓட்டம், நடை, சைக்கிளிங், பைக்கிங், அட்வெஞ்சர் ஸ்போர்ட்ஸ் என விடுபடல்களில் பலவகை உண்டு. மதுரை `பசுமை நடை', நெஞ்சுக்கு நெருக்கமான ஒன்று.

எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணனின் எண்ணம்தான் இதன் ஆரம்பம். ஆர்வமுள்ள பலர் அடுத்தடுத்து சேர, ஆரம்பமானது பசுமை நடை. வார இறுதி நாட்களில் மதுரையைச் சுற்றியுள்ள ஏதேனும் ஒரு தொல்லியல் சின்னம் நோக்கிக் கிளம்புகிறார்கள். வழி எல்லாம் நடை, நடை முழுவதும் பேச்சு, பேச்சு எல்லாம் இயற்கை... என அந்த நாளைக் கொண்டாடுகிறார்கள். வரலாறு, தொல்லியல், பொழுதுபோக்கு, பொது அறிவு எல்லாம் இணைந்த இயற்கை காம்போவான இந்தப் பசுமை நடை, ஐந்து ஆண்டுகளாகத் தொடர்கிறது.

 அரிட்டாப்பட்டி, அழகர்மலை, கிடாரிப்பட்டி, கீழவளவு, கருங்காலக்குடி, திருவாதவூர், மாங்குளம், வரிச்சியூர், திருப்பரங்குன்றம், முத்துப்பட்டி, ஆனைமலை... என மதுரையைச் சுற்றியுள்ள பல இடங்களில் ஏராளமான சமணர் வசிப்பிடங்கள் நிறைந்திருக்கின்றன. ஒவ்வொன்றும் வரலாற்றுத் தடம். ஆனால், போதிய கவனிப்போ, பராமரிப்போ இல்லாமல் கிரானைட் நிறுவனங்கள் சிதைத்து அழிக்கின்றன. பசுமை நடை மூலம் தொடர்ச்சியான மக்கள் கண்காணிப்பு இருப்பதால், இப்போது சமணர் மலைகள் கொள்ளையர்களிடம் இருந்து காப்பாற்றப்படுவதில், சற்று நிம்மதி!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்