மைல்ஸ் டு கோ... 7

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
இயக்குநர் வெற்றி மாறன், படம்: ஸ்டில் ராபர்ட்

`‘கதை நேரம்' படப்பிடிப்பு நாட்கள்தான் என் வாழ்வில் கிரியேட்டிவான, ஆக்கபூர்வமான நாட்கள். நான் ஆசைப்பட்டதை எந்த காம்ப்ரமைஸும் இல்லாமல் எடுக்க முடிந்தது’ என்பார் பாலு மகேந்திரா சார். அவரது படைப்பாற்றலின் உச்ச நாட்களில் அவர் பணியாற்றுவதற்கு எங்கள் டீம் உறுதுணையாக முழு ஈடுபாட்டுடன் ஓடிக்கொண்டிருந்தது. தனது பட வேலைகளுக்காக, தங்கவேலவன் பாதியிலேயே சென்றுவிட்டார். எங்களால் முடிந்த அளவுக்குக் கடினமாக வேலைசெய்கிறோம் என்பது சாருக்கும் புரிந்திருந்தது. புது உதவி இயக்குநர்களைச் சேர்த்தால் எங்கள் வேலை பளு சற்று குறையும் என நினைத்தார்.

அப்போது, லயோலா கல்லூரியின் பண்பாட்டுத் துறையைச் சேர்ந்த பேராசிரியர் காளீஸ்வரன் சொன்னார் என, ஒருவர் என்னைப் பார்க்க வந்தார். ‘`சாரிடம் உதவியாளராக சேர ஆசை'’ என்றார். எல்லா இயக்குநர்களிடமுமே சந்திக்க வருபவர்களைத் தடுத்து நிறுத்தி அனுப்ப ஒருவர் இருப்பார். மற்றவர் கண்களுக்கு அவர் வில்லனாகத்தான் தெரிவார்.எங்கள் அலுவலகத்தில் அப்போது நான்தான் அந்த வில்லன். அவரைத் திருப்பி அனுப்பினேன். நான் இல்லாத சமயம் ஆபீஸுக்கு வந்தால், சாரைப் பார்த்து வேலைக்குச் சேர்ந்துவிடலாம் என எல்லோரும் பேசிக்கொள்வதுண்டு.

ஒருநாள், வாய்ப்பு கேட்டு வந்த அவரை சார் பார்த்து ``என்ன வேண்டும்?'' எனக் கேட்க, ``உதவி இயக்குநராகச் சேரணும்'' என்றார். ‘`இல்லப்பா... இங்கே நிறையப் பேர் இருக்காங்க. நீ வேற இடத்துல ட்ரை பண்ணு” என்றார் சார். புதிய உதவி இயக்குநர்கள் தேவை என்ற நிலை இருந்தபோதும், சார் உதவி இயக்குநர்களைத் தேர்வுசெய்யும் முறையே வித்தியாசமானது. சார் அறைக்குள் நுழைய, இவர் வெளியே நகர ஆரம்பித்தார். ஏதோ யோசித்தவராக சார் திரும்பி அவரிடம் “ஏய் நில்லுப்பா... என்ன படிச்சிருக்க?” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்