ஹவுஸ் ஹஸ்பெண்ட் தெரியுமா?

பா.ஜான்ஸன்

`ஹவுஸ் வொய்ஃப்' என்பது நமக்கு பழகிய சொல். ஆனால், ஹவுஸ் ஹஸ்பெண்ட்? அதுதான் இந்தப் படம். ஹவுஸ் ஹஸ்பெண்ட் + வொர்க்கிங் வொய்ஃப் என்ற சீரியஸ் கான்செப்ட்டில் வந்திருக்கும் செம ஜாலி சினிமா, `கி அன்டு கா'.
 
கியாவுக்கு (கரீனா கபூர்) சில கனவுகள் உண்டு... தான் பார்க்கும் மார்க்கெட்டிங் மேனேஜர் வேலையில் இருந்து பதவி உயர்வுபெற்று, வைஸ் பிரசிடென்ட், சி.இ.ஓ என உயர வேண்டும். கபீருக்கும் (அர்ஜுன் கபூர்) சில கனவுகள் உண்டு... தன் அம்மாவைப்போல ஒரு ஆர்டிஸ்ட் ஆக வேண்டும். அவனது அம்மா ஒரு ஹவுஸ் வொய்ஃப். வீட்டைத் தொடர்ந்து இயங்கவைக்கும் ஒரு ஆர்டிஸ்ட். கரீனாவும் அர்ஜுனும் ஒரு விமானப் பயணத்தில் சந்தித்துக்கொள்ள சின்ன நட்பு உருவாகிறது. பேசிப் பழகி, பின் அது காதலாக மாறுகிறது.

அர்ஜுனின் ஹவுஸ் ஹஸ்பெண்ட் கான்செப்ட் கரீனாவின் கனவுகளுக்கு வழிவிட, அர்ஜுன் கழுத்தில் தாலி கட்டுகிறார் கரீனா. பெட் காபி தொடங்கி இரவு டயர்டாக வரும் மனைவியின் காலணிகளைக் கழற்றி விடுவது வரை அனைத்து வீட்டு வேலைகளையும் செய்துமுடிக்கும் பொறுப்பான கணவன்... இந்தச் சுதந்திரத்தால் தனது அலுவலக வேலைகளை மிக நேர்த்தியாகச் செய்துமுடிக்கும் மனைவி... என கதை மிக அழகாகச் சென்றுகொண்டிருக்க, இருவருக்கும் இடையில் வருகிறது ஒரு ஈகோ சண்டை. அது என்ன... இருவரும் அதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது இயக்குநர் பால்கியின் ஸ்பெஷல் டச்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்