கிரிக்கெட்டுக்கே பார்ட்டிதான்!

பு.விவேக் ஆனந்த்

டி20 உலகக்கோப்பையை வென்று மேற்கு இந்தியத் தீவு வீரர்கள் மைதானத்தில் ஆடியபோது, `அவர்களுடன் சேர்ந்து ஆட வேண்டும்' என ஒவ்வொரு  கிரிக்கெட் ரசிகனும் நினைத்திருப்பான். ஆம்... கிரிக்கெட்டை ஏதோ தொழில்நுட்பம் போல அணுகி, புதிய டெக்னிக்குகளை உருவாக்கி வெல்லும் அணி அல்ல மேற்கு இந்தியத் தீவு அணி. கிரிக்கெட்டை உயிராக, உண்மையாக, ஜாலியாக, ஃபன்னாக, ஒரு விளையாட்டாக ஆடி உலகக்கோப்பையை வென்று `நாங்க வேற மாதிரி' என உலகுக்குக் காட்டியிருக்கிறது.

ஆண்கள் உலகக்கோப்பை மட்டும் அல்ல, பெண்கள் உலகக்கோப்பை, பிப்ரவரி மாதம் நடந்து முடிந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலகக்கோப்பை என ஐ.சி.சி-யின் அனைத்து உலகக்கோப்பைகளுமே இப்போது மேற்கு இந்தியத் தீவுகளிடம்தான் இருக்கின்றன. `கிரிக்கெட்டின் அண்டர் டாக்ஸ்' என அழைக்கப்பட்டுவந்த மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் இந்த விஸ்வரூபம், யாருமே எதிர்பாராதது. இந்த வெற்றி எப்படிச் சாத்தியமானது?

பயம் இல்லை!

இந்தியா, தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா என இந்த உலகக்கோப்பையில் வலுவான அணிகள் அனைத்துமே திணற, ஒவ்வொரு போட்டியையும் ஜஸ்ட் லைக் தட் ஜெயித்து ஆச்சர்யப்படுத்தியது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. ஆனால் இந்த சாம்பியன் அணியின் 15 வீரர்களும் சேர்ந்து, உலகக்கோப்பை தொடங்குவற்கு முன்னர் ஒரு மீட்டிங்கூட போடவில்லை. இந்தியாவுக்கு ஃப்ளைட் ஏறுவதற்கு முன்னர் வரை எந்த வீரர் வேண்டுமானாலும் தொடரில் இருந்து விலகிவிடலாம் என்ற நிலைதான் இருந்தது. சம்பளப் பிரச்னை, மேற்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அடாவடிப்போக்கு எல்லாவற்றையும் சமாளித்து ஒரு வழியாக இந்தியா வந்த பின்னர் பயிற்சிப் போட்டியிலேயே இந்தியாவிடம் மண்ணைக் கவ்வினார்கள். `இவங்க தேறவே மாட்டங்க' என ட்விட்டர் முதல் டிரெஸ்ஸிங் ரூம் வரை விமர்சனங்கள் பறந்தன. ஆனால், எதற்கும் அசையவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்