மீண்டும் கிரானைட் கிடு கிடு!

செ.சல்மான், படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்

லைகளையும் கண்மாய்களையும் இருந்த இடம் தெரியாமல் அழித்து ஒழித்து, `கிரானைட் குவாரிகள்' என்ற பெயரில் பல நூறு ஏக்கர் இயற்கை வளங்களைச் சுரண்டிய மதுரை பி.ஆர்.பி வழக்கு, மறுபடியும் தலைப்புச் செய்திகளில் அடிபடுகிறது. `இரண்டு வழக்குகளில் இருந்து பி.ஆர்.பி விடுதலை’, `அந்தத் தீர்ப்பை வழங்கிய நீதிபதி சஸ்பெண்ட்’... என தேர்தல் நேரத்தையும் மிஞ்சுகிறது இந்தப் பரபர சர்ச்சை. `அரசியல் கட்சிகள், ஊடகங்கள், பொதுமக்கள் என அனைவரின் கண்காணிப்பிலும் இருக்கும் ஒரு வழக்கிலேயே இத்தகைய நிலை என்றால், பி.ஆர்.பி மீது உள்ள மற்ற வழக்குகள் எல்லாம் என்ன ஆகும்?' என்பதுதான் இப்போது அனைவரது மனங்களிலும் எழும் கேள்வி.

இது, சகாயம் தொடங்கிவைத்த வதம். அவர் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, 20 வருடங்களாக மதுரை மாவட்டத்தில் நடந்துவந்த கிரானைட் குவாரி மோசடிகளை ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்தினார். அவர் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்த உடனேயே, மதுரையில் இருந்து மாற்றப்பட்டார். அவருக்கு அடுத்து வந்த அன்சுல் மிஸ்ராவும் சட்டவிரோதமான குவாரிகள் மீதான கிடுக்கிப்பிடியைத் தொடர்ந்தார். அனைத்து குவாரிகளும் இழுத்து மூடப்பட்டன. பி.ஆர்.பி உள்பட பல குவாரி உரிமையாளர்கள் சிறைக்குச் சென்று திரும்பினார்கள். எஞ்சிய மதுரை மாவட்ட மலைகள் ஓரளவு காப்பாற்றப்பட்டன.

விதிகளை மீறி கிரானைட் கற்களை வெட்டி எடுத்து, பட்டா நிலங்களில் அடுக்கிவைத்த இரண்டு வழக்குகளில் இருந்துதான் தற்போது பி.ஆர்.பி விடுவிக்கப்பட்டிருக்கிறார். இந்த வழக்குகள் அன்சுல் மிஸ்ரா பதிவுசெய்தவை. அவருக்கு அடுத்துவந்த மதுரை மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியனும் குவாரிகள் மீது புதிய வழக்குகளைத் தொடர்ந்தார். இப்படி மதுரையைச் சுற்றி செயல்படும் பல்வேறு மோசடி குவாரிகளுக்கு எதிராக மொத்தம் 96 வழக்குகள் மேலூர் நீதிமன்றத்தில் நடந்துவருகின்றன. இந்த நிலையில்தான், பி.ஆர்.பி மீதான இரண்டு வழக்குகளில், `பி.ஆர்.பி தரப்பு எந்தத் தவறும் செய்யவில்லை. தேவை இல்லாமல் வழக்கு போட்ட அன்சுல் மிஸ்ரா, அரசு வழக்குரைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என மாஜிஸ்திரேட் மகேந்திர பூபதி தீர்ப்பு அளித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்