மைல்ஸ் டு கோ... 8

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
இயக்குநர் வெற்றி மாறன், படம்: ஸ்டில் ராபர்ட்

பாலு மகேந்திரா சாரிடம் இருந்து நின்ற பிறகு என் அன்றாட வாழ்க்கையே மாறியிருந்தது. ஷூட்டிங் நாட்களில் அதிகாலையில் எழுந்து கிளம்புவது எனக்குப் பெரும் சிரமம். அதனால் இனி காலையில் எழுந்திருக்க வேண்டாம் என்பதே பெரிய ஆறுதலாக இருந்தது. கோடை விடுமுறை கண்ட பள்ளி மாணவன்போல் அப்படி ஒரு சந்தோஷம். நண்பன் சக்தியும் மணிகண்டனும்தான் என் அப்போதைய அறைத் தோழர்கள். மணிகண்டன் பின்னாளில்  இயக்குநர் ஆகும்போது மணிமாறன் ஆகிவிட்டார். விக்ரம் சுகுமாரன் அப்போது ரெட் ஹில்ஸில் இருந்தார். வாரம் மூன்று நாட்களாவது கதை விவாதத்துக்கு அறைக்கு வந்துவிடுவார்.

காலை 10 மணிக்குத்தான் எழுந்திருப்போம். டீ சாப்பிட்டுவிட்டு, ஏதேனும் ஒரு படம் பார்ப்போம். கொஞ்ச நேரம் கதைகள் பேசுவோம். மாலை கிளம்பிச் சென்று காதலியைப் பார்ப்பேன். அவ்வளவுதான். அந்த நாள் முடிந்துவிடும். எனக்கான நேரம் அதிகம் கிடைத்தது. சில நாட்கள் ஜாலியாகச் சென்றன. ஒருநாள் காதலியின் வீட்டில் திருமணம் பற்றிய பேச்சு வந்தது. என்னிடம் அவர் கேட்டபோது, `படம் பண்ணாம கல்யாணம் பண்றது இல்லைனு முடிவுபண்ணோமே’ என்பதைச் சொன்னேன். அவரும் `சரி’ என்றார்.

ஒருகட்டத்தில் எனக்குப் பயம் வந்தது. வாழ்க்கை ஓர் ஒழுங்கில் இல்லை என்பதை உணர்ந்தேன். அடுத்த நாள் அதிகாலையிலேயே எழுந்து, குளித்து, கிளம்பி, டீ குடித்துவிட்டு வந்து புது ஸ்கிரிப்ட் எழுதலாம் என அமர்ந்தேன். இரண்டு சீன்களுக்கு ஒன்லைன் மட்டுமே முடிந்திருக்கும். அதற்குள் சக்தி காலை டிபன் ரெடி செய்திருப்பான். அது, பெரும்பாலும் உப்புமாவாகத்தான் இருக்கும். சக்தியின் உப்புமாவை `பேச்சுலர்களின் டிலைட்’ எனலாம். அதேபோல, சாம்பார் வைப்பதில் மணி எக்ஸ்பர்ட். இதுவரை நான் சாப்பிட்ட சாம்பார்களில் மணி செய்ததுதான் பெஸ்ட். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்