வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

facebook.com/jeevan.rajaram:

என் மகள், என் மனைவியிடம் ஏதோ சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருந்தாள்... டி.வி-யை மியூட் செய்துவிட்டு காதுகொடுத்தேன்.

மகள்: மம்மி, நாம எர்த்ல மட்டுமே ஏன் இருக்கோம்... மூனுக்குப் போலாம்ல?

மனைவி: இல்லம்மா, அங்கே நாம வாழ முடியாது.

மகள்: ஏன்?

மனைவி: ஆக்ஸிஜன், வாட்டர் ஏதுவுமே அங்கே இல்லை, அதான்.

மகள்: சோ வாட், நாம எடுத்துட்டுப் போவோம்.

மனைவி: அதெல்லாம் முடியாது. உனக்குச் சொன்னா புரியாது... போய் விளையாடு.

மகள்: மம்மி, மூனுக்கு ஏற்கெனவே ரெண்டு பேர் போயிட்டு வந்திருக்காங்களாம், எங்க மிஸ் சொன்னாங்க.

twitter.com/kumarfaculty:
உலகின் முதல் தெர்மாமீட்டர், அம்மாவின் கையாகத்தான் இருந்திருக்கும்!

twitter.com/arasu1691: எதுவுமே பேசாத கரடி பொம்மைகளை அணைத்துக்கொண்டு உறங்கும் பெண்களின் உளவியல்தான் ஆண்களுக்கான முதல் எச்சரிக்கை!

twitter.com/thalabathe:
`தேவர்மகன்' சிவாஜி மாதிரி வாழ்ந்து, வயசாகி, ஒரு மதிய சாப்பாட்டுக்குப் பிறகு குழந்தைகளை ஏறி மிதிக்கச்சொல்லி, அப்படியே செத்துப் போயிடணும்!

twitter.com/MrElani: ஒரு சென்ட்ரல் மினிஸ்டரே, `முதலமைச்சரைப் பார்க்க முடியலை'னு புலம்புறார். இந்த லட்சணத்துல நான் உங்கள் சகோதரி, சித்திபொண்ணுனு  வாட்ஸ்அப் ஆடியோ வேற!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்