கப்பர் சிங்கும் ஸ்வர்க்க ராஜ்ஜியமும்!

பா.ஜான்ஸன்

ந்திரா மசாலாவை இம்போர்ட் செய்து, பாலிவுட் தயாரித்த `குருமா'தான் சல்மான் கானின் `தபாங்’. `எப்படிடா இந்த டேஸ்ட்டை மிஸ் செய்தோம்?’ என அதன் ரீமேக் உரிமையை வாங்கி, `கப்பர் சிங்’ ஆக்கி, 10 வருட ஃப்ளாப் ரெக்கார்டை உடைத்தார் பவன் கல்யாண். அதன் பிறகு அவரது கிராஃப் எகிற, இப்போது `கப்பர் சிங் சீஸன் - 2'.

ரெளடிகளை ரகளைசெய்யும் ஹைதராபாத்் போலீஸ், கப்பர் சிங் (பவன் கல்யாண்). நண்பர் ஒருவர் சொன்னதைக் கேட்டு, பவனை ரத்தன்பூருக்கு பதவி உயர்வோடு பார்சல்செய்கிறார் உயர் அதிகாரி தனிக்கெல்லா. ரத்தன்பூரை, இரண்டு ராஜ குடும்பங்கள் ஆண்டுவருகின்றன. ஒன்று இளவரசி அர்ஷி (காஜல் அகர்வால்) குடும்பம், இன்னொன்று பைரவ் சிங் (ஷரத் கெல்கர்) குடும்பம். ஷரத் கெல்கருக்கு, ஊர் மக்களை அடிமைப்படுத்தி, விவசாய நிலங்களைக் கைப்பற்றும் டெம்ப்ளேட் தெலுங்கு வில்லன் வேலை. எதிர்த்து கேள்வி கேட்கும் ஆட்களைக் கொன்று குவிக்க, அதைத் தடுப்பதற்காக வருபவர்தான் பவன் கல்யாண். `யெஸ்’ சொல்பவனை எதிர்த்து நின்று `நோ’ சொன்னால் என்ன ஆகும்? அந்தக் களேபரம்தான் படம்.

தனக்கு ஏற்ற சைஸில் ஒரு பக்கா ஸ்கிரிப்டை தானே தைத்திருக்கிறார் பவன். ஆம், படத்துக்கு கதை, திரைக்கதை பவனேதான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்