கிறுக்கல் கலை!

கார்க்கிபவா

`கிராஃபிட்டி' என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இன்று ஃபேஸ்புக்கில் எழுதாதவர்களை, `கற்கால மனிதர்கள்' என ஈஸியாகச் சொல்லிவிடுகிறார்கள். அரசாங்கம் முதல் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான சினிமா வரை எல்லாவற்றையும் விமர்சித்து ஃபேஸ்புக் சுவரில் எழுதுகிறோம். நிஜ சுவரில் இதுபோன்ற புரட்சியைச் செய்த வரலாறுதான் `கிராஃபிட்டி’.
 
இது ரோமன் காலத்துக் கலை. எந்த ஒரு தளத்திலும் (Surface) நாம் வாழ்ந்தோம் என்பதற்கான அடையாளத்தைப் பதிவுசெய்வதுதான் கிராஃபிட்டி. மலையில், பேருந்தில், கோயிலில், டாய்லெட்டில்... என எங்கும் நாம் வரையும் கிறுக்கல்கள்கூட அப்படித்தான். `கிராஃபிட்டி’ என்றால் இத்தாலி மொழியில் `கிறுக்குவது’ என அர்த்தம்.

ஹிப்ஹாப் என்ற கலாசாரத்தின் இசை வடிவமே ராக். அதன் ஓவிய வடிவம், கிராஃபிட்டி. 1960-களில்தான் இது புகழ்பெற ஆரம்பித்தது. அன்றைய அமெரிக்காவில் ஒருவர், கிடைக்கும் சுவர் எங்கும் தன் பெயரை எழுதிக்கொண்டே சென்றார். ஒரு கட்டத்தில் அவர் பெயர் பெரும்பாலான மக்களுக்குத் தெரிய ஆரம்பித்தது. அப்போதுதான் மக்கள் சுவர்களை தங்களின் கருத்துக்களைச் சொல்லும் மீடியமாகப் பார்த்தார்கள்.  அரசாங்கத்தை எதிர்த்து கருத்துச் சொல்லவும் சுவரைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். பிறகு அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் சுவர்களில் ஓவியம் வழியாகவும், அரசியல் கேலிச் சித்திரங்கள் மூலமாகவும், கிராஃபிட்டி கலை அதிவேகமாக வளர்ந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்