ரசிகன்தான் ஹீரோ!

பா.ஜான்ஸன்

ரு சினிமா ரசிகன், தன் ஹீரோவுக்கே வில்லனானால், அதுதான் ‘ஃபேன்’. இப்படிப்பட்ட கதையைத் தேர்வுசெய்ததற்காகவே ஷாரூக்கைக் கொண்டாடுகிறது பாலிவுட்.

ஒரு ரசிகன், ஹீரோவுக்காக என்னவெல்லாம் செய்வான்? கட் அவுட், ஃப்ளெக்ஸ், பேனர், பல்க் டிக்கெட் புக்கிங்... இப்படி பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆர்யன் கன்னாவின் (ஷாரூக் கான்) தெறி வெறி ஃபேன் கௌரவ் சந்த்னா (இதுவும் ஷாரூக்தான்).

டெல்லியில் `சைபர் கஃபே' நடத்திவரும் கௌரவ் சந்த்னா, தன் ஹேர்ஸ்டைல், நடை, உடை, சிரிப்பு, அழுகை எல்லாவற்றிலும் பாலிவுட்டின் பகுத் படா சூப்பர் ஸ்டார் `ஆர்யன் கன்னா’வாகவே வெளிப்படுகிறான். போட்டி ஒன்றில் ஆர்யனைப்போலவே பெர்ஃபார்ம் செய்து, ட்ராஃபியைத் தட்டும் அவன், அதை ஆர்யனுக்கு பிறந்த நாள் பரிசாக அளிக்க, அவரைச் சந்திக்கக் கிளம்புகிறான்.

ஆனால், அங்கு ஆர்யனின் கையசைவைக் காணவே திரண்டிருக்கும் அத்தனை பெரிய கூட்டத்துக்கு நடுவே, அவனைச் சந்திக்க வாய்ப்பே இல்லை எனத் தெரிகிறது. அந்தச் சமயத்தில் அவனைச் சந்திக்க இவன் பிடிக்கும் ஒரு ஐடியா, கௌரவ் மீது ஆர்யனுக்கு வெறுப்பை ஏற்படுத்துகிறது. ‘இந்த மாதிரி பண்றவன்லாம் என் ரசிகனே இல்ல.

நீ ஒழுங்கா கிளம்பி ஊருக்குப் போயிடு' எனக் கடுமையாகத் திட்ட, மொத்த வாழ்க்கையும் நொறுங்கிப்போனதாக நினைக்கிறான் கௌரவ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்