இருக்கு... ஆனா இல்லை! - இது கண்களுக்கான கணினி!

கார்க்கிபவா

`மை டியர் குட்டிச்சாத்தான்' ஞாபகம் இருக்கிறதா? அதில் சிறுவர்களுடன் ஒரு குட்டிச்சாத்தானும் சிறுவன் உருவில் சுற்றும். அந்தச் சிறுவன் மற்றவர் கண்களுக்குத் தெரிய மாட்டான். `ஃபேன்டசி கதை' என அன்று நாம் ஆச்சர்யமாகப் பார்த்ததை, இன்று நிஜமாக்கியிருக்கிறது தொழில்நுட்பம். வழக்கமாக கூகுள் நிறுவனம்தான் இப்படி `அட’ போடவைக்கும். இந்த முறை `ஹோலோலென்ஸ்’ உடன் களம் இறங்கியிருப்பது மைக்ரோசாஃப்ட்.

ஹோலோலென்ஸைப் பற்றி தெரிந்துகொள்ளும் முன்னர், ஹோலோகிராம் பற்றி பார்ப்போம்.

`ஹோலோஸ்’ என்பதற்கு கிரேக்க மொழியில் `முழுமையான’ என அர்த்தம். `கிராமா’ என்றால் தகவல். அதில் இருந்து வந்ததுதான் ஹோலோகிராம். புரொஜக்‌ஷன் மூலம் உருவாக்கப்படும் முப்பரிமாணப் பிம்பத்துக்கு `ஹோலோகிராம்’ எனப் பெயர். சென்ற ஆண்டு தமிழ்நாடு அரசு நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், குதிரை ஒன்று பறந்துவந்து ஜெயலலிதாவுக்கு வணக்கம் வைத்தது நினைவில் இருக்கிறதா? அதுதான் ஹோலோகிராம்.

ஹோலோலென்ஸ் என்பது, நம் கண்களில் அணியக்கூடிய ஒரு ஹோலோகிராஃபிக் கம்ப்யூட்டர். இது நாம் விரும்பும் ஹோலோ கிராஃபிக் பிம்பத்தை உருவாக்கும். அந்தப் பிம்பத்தைத் தொட்டு நாம் கொடுக்கும் சிக்னலுக்கு ஏற்ப வேலைசெய்யும்; நாம் சொல்வதைக் கேட்கும்; அதுவும் பேசும்.

ஹோலோலென்ஸை அணிந்துகொண்டு, அமெரிக்காவில் இருக்கும் உங்கள் கிளையன்ட்டுடன் ஸ்கைப்பில் வீடியோ கால் பண்ணலாம். லேப்டாப் திரையில் தெரியவேண்டிய அவரது வீடியோ, உங்களுக்கு முன்னால் தெரியும். அப்படியே நடந்துசென்றால், அவரும் உங்களுடன் வருவார். ஆனால், மற்றவர் கண்களுக்கு அந்த வீடியோ தெரியாது. ஹோலோலென்ஸில் இருக்கும் ஸ்பீக்கரில் அவர் பேசுவது கேட்கும். கிளையன்ட் ஏதேனும் தேவையில்லாமல் பேசினால், அவர் தலையில் லேசாகக் கொட்டலாம். அவருக்கு வலிக்காது என்பது மட்டும்தான் வித்தியாசம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்