பிட்ஸ் பிரேக்

இங்கிலாந்து அரசக் குடும்பத்தினரை, ஜனாதிபதிகளும் பிரதமர்களும் பிரபலங்களுமே சந்திக்க முடியும் என்பதை மாற்றியிருக்கிறார் 93 வயதான முதியவர் போமன் கோஹினூர். மும்பையில் `பிரிட்டானியா அண்ட் கம்பெனி’ என்கிற பெயரில், ரெஸ்டாரன்ட் நடத்திவரும் போமனின் இரண்டு நிமிட வீடியோ, #willkatemeetme என்ற ஹேஷ்டேகுடன் சோஷியல் மீடியாவில் வைரல்ஹிட். இந்த வீடியோவைப் பார்த்த பிரிட்டிஷ் தூதரக அதிகாரிகள், இது பற்றி இளவரசர் வில்லியம் மற்றும் கேட்டிடம் சொல்ல, தாஜ் ஹோட்டலுக்கு அவரை அரச மரியாதையுடன் அழைத்து வரச்சொல்லி சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறது ராயல் ஃபேமிலி. `இளவரசரையும் இளவரசியையும் சந்தித்தேன். அவர்கள் மிகவும் அன்பானவர்கள். இங்கிலாந்து அரசக் குடும்பத்தினரைச் சந்திக்க வேண்டும் என்பது என் வாழ்நாள் கனவு' என நெகிழ்கிறார் போமன்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்