“அப்பாதான் எப்பவும் ஆக்‌ஷன் கிங்!”

பா.ஜான்ஸன், பா.விஜயலட்சுமி

``ஐஸ்வர்யா லண்டன்ல ஃபேஷன் ஸ்டைலிங் படிச்சிட்டிருந்தப்போ, அவங்களுக்கு நடிக்கிற ஆர்வம் இருக்குனு எனக்குத் தெரியாது; ஏன்... அவங்களுக்கேகூட தெரியாது. முதல் பட வாய்ப்பு வந்தப்போ `ஓ.கே ட்ரை பண்ணிப்பார்க்கிறேன்'னு சொன்னாங்க. உடனே, ஆர்வமா ஒரு ஆக்ட்டிங் கோர்ஸ் படிச்சாங்க. ஆனா, டைம் கம்மியா இருந்ததால, உடனே ஷூட்டிங் போயிட்டாங்க. சினிமானு வரும்போது படம் யாரை ஃபோக்கஸ் பண்ணுதுனு ஒண்ணு இருக்கு. அந்த விதத்தில் அவங்க நடிச்ச முதல் படம் ஐஸ்வர்யாவை சரியா பிரசென்ட் பண்ணலைங்கிறதுல எனக்கு வருத்தம் இருந்தது.

`உங்களுக்குப் பிடிச்ச துறையைத் தேர்ந்தெடுங்க. உங்களுக்கு சப்போர்ட்டா நான் இருப்பேன்'னு என் ரெண்டு பொண்ணுங்களுக்கும் சொல்லி யிருக்கேன். அந்த விதத்தில் இப்போ ஒரு அப்பாவா மகளுக்கு நான் செய்யவிரும்பிய விஷயம்தான் இந்தப் படம்'' எனப் பொறுப்பான அப்பா அர்ஜுன் பேச, அந்த அன்பை ரசிக்கிறார் ஐஸ்வர்யா. புதுமுகம் சந்தன், ஐஸ்வர்யா நடிப்பில் `காதலின் பொன்வீதியில்' படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் அர்ஜுன்.

``இதுவரை நிறைய ஆக்‌ஷன் படங்கள் பண்ணியிருக்கேன். ஆனா, எனக்குள் நிறையக் காதல் கதைகள் இருக்கு. நான் காதல் படங்கள்ல நடிச்சா, அது செட் ஆகாதுங்கிற யோசனையில அதை எல்லாம் படமா பண்ணலை. ஒரு அவுட் அண்ட் அவுட் லவ் ஸ்டோரிதான் `காதலின் பொன்வீதியில்'.''

``அப்பா ஒரு லவ் ஸ்டோரி எடுக்கிறார் என்பதுதானே ஸ்பெஷல். அதான் இந்தக் கதைக்கு நான் ஓ.கே சொன்னேன். லவ் ஸ்டோரின்னாலும் படத்துக்குள்ள அப்பாவுக்கு மிகவும் பிடிச்ச நாட்டுப்பற்று விஷயங்களும் இருக்கும்'' என்கிறார் ஐஸ்வர்யா.

``அப்பா அர்ஜுனுக்கும் டைரக்டர் அர்ஜுனுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு. செட்ல அப்பா செம புரொஃபஷனல். ஆனா, வீட்டுக்கு வந்தா செம கலாட்டாவான ஒரு ஃப்ரெண்ட். எனக்கு டான்ஸ் ரொம்பப் பிடிக்கும். அம்மா கிளாசிக்கல் டான்ஸர். அவங்களைப் பார்த்துதான் எனக்கும் டான்ஸ் ஆர்வம் வந்து `கதக்' கத்துக்கிட்டேன்'' என ஐஸ்வர்யா சொல்ல, ``அப்போ அப்பாகிட்ட இருந்து நீங்க எதுவும் கத்துக்கலையா?'' என அர்ஜுன் கேட்க, ``உங்ககிட்ட இருந்துதான் நடிப்பு கத்துக்கிட்டேன்பா'' என அப்பாவைச் செல்லமாகக் தட்டியவர், ``ஆனா, அப்பா மாதிரி என்னால ஆக்‌ஷன் பண்ண முடியாது. அதுல அவர்தான் எப்பவுமே ஆக்‌ஷன் கிங்'' எனச் சிரிக்கிறார் ஐஸ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்