“உழைப்புக்கான பலன் நிச்சயம் கிடைக்கும்!”

நா.சிபிச்சக்கரவர்த்தி

```விக்டர்' ரொம்ப பெரிய ரீச். அதனால அடுத்த ஸ்கிரிப்ட் சரியா அமையணும்னு காத்திருந்தேன். நிறையக் கதைகள் சொன்னாங்க. ஆனா, எதுவுமே என்னைப் பெருசா ஈர்க்கவில்லை. ‘ஈரம்’ அறிவழகன் சார் சொன்ன ‘குற்றம் 23’ ஒன்லைன் ரொம்பப் பிடிச்சிருந்தது. சப்ஜெக்ட்டும் ரொம்ப ஸ்ட்ராங்கா இருந்தது. உடனே களத்துல இறங்கிட்டேன்” - வில்லன் விக்டராக ‘என்னை அறிந்தால்’ படத்தில் அலறவிட்ட அருண் விஜய், ‘குற்றம் 23’ படம் மூலம் போலீஸாக அதிரடி ஆக்‌ஷனில் இறங்கியிருக்கிறார்.

“ ‘குற்றம் 23’னு டைட்டிலே கொஞ்சம் வித்தியாசமா இருக்கே?”

“இது மெடிக்கல் க்ரைம் த்ரில்லர் கதை. தமிழ் சினிமாவுல இது மாதிரி சில படங்கள் வந்திருந்தாலும் நாங்க எடுத்துக்கிட்ட விஷயம் வேற. ராஜேஷ்குமார் சார் நாவலைத் தழுவி அறிவழகன் சார் விறுவிறுப்பான திரைக்கதையை உருவாக்கியிருக்கார். க்ரைம் சப்ஜெக்ட் என்பதால், டைட்டில் ரொம்ப சிம்பிளா இருக்கணும்னு நினைச்சோம். முதல்ல ‘குற்றம்’னு ஒரு டைட்டிலையும், ‘23’னு ஒரு டைட்டிலையும் செலெக்ட் பண்ணி வெச்சிருந்தோம். அப்புறம் ரெண்டையும் சேர்த்து ‘குற்றம் 23’னு வெச்சுட்டோம். 23 என்பது, கதையில வரும் ஒரு சம்பவம். இதுல இன்னொரு சர்ப்ரைஸ் என்னன்னா, இது என்னுடைய 23-வது படம்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்