லால்குடியின் உதிரிப்பூக்கள்!

வீயெஸ்வி, படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

ருளில் மியூஸிக் அகாடமி அரங்கம்... மேடையில் பரவும் மிதமான காவி நிற வெளிச்சம். நடுவில் பாம்பே ஜெயஸ்ரீ, அபிஷேக் ரகுராம். விட்டல் ராமமூர்த்தியும் எம்பார் கண்ணனும் வயலினுடன். அனந்தா ஆர்.கிருஷ்ணன் மற்றும் கணபதிராமன் மிருதங்கம். இந்த அறுவருடன் தபேலா ஓஜஸ் அதியாவும் இணைந்து எழுவரானார்.

விட்டலும் எம்பாரும் வயலினில் மல்லாரி வாசித்து ஆரம்பித்துவைக்க, மிருதங்கமும் தபேலாவும் இணைந்து கம்பீரம் சேர்த்தன. அபிஷேக் பாட, பாம்பே ஜெயஸ்ரீ அவருடன் சேர்ந்துகொள்ள, கம்பீரநாட்டை ராகத்தில் சுவாமி புறப்பாடு.

அன்றைய உற்சவமூர்த்தி, வயலின் மேதை மறைந்த லால்குடி ஜெயராமன்.

‘To Sir, With Love’ என்ற தலைப்பில் நடந்த இந்த நிகழ்வு, ஸ்ரீராம் குழுமத்தின் ஏற்பாடு. இதன் நிறுவனர் ஆர்.தியாகராஜன், லால்குடியின் அதிதீவிர ரசிகர். அவரது இசைக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டவர். லால்குடியின் சங்கீத மேதைமைக்கு புகழ் அஞ்சலி செலுத்த விரும்பி, அவரது இசையில் நாளும் மூழ்கித் திளைத்துக்கொண்டிருக்கும் பாம்பே ஜெயஸ்ரீ குழுவினரிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார் தியாகராஜன்.

இரண்டு வருடங்களுக்கு முன்னரே, இதற்கான விதை தூவப்பட்டிருக்கிறது. ‘ஜூலை 1, 2016’ என, கடந்த நவம்பரிலேயே தேதியை முடிவுசெய்து அகாடமியை ‘புக்’ செய்திருந்தனர்.
லால்குடியிடம் அபரிமிதமான குருபக்தி கொண்ட பிரதான சீடர் பாம்பே ஜெயஸ்ரீ லால்குடியின் குடும்ப உறவு அபிஷேக். விட்டல், லால்குடியின் தயாரிப்பு. விட்டலிடம் சிறிது காலம் வயலின் கற்றிருக்கிறார் எம்பார் கண்ணன். கணபதிராமன், ஜெயராமன் கச்சேரிகளுக்கு நிறைய வாசித்திருக்கிறார்கள். ஆக, குழுவில் கிட்டத்தட்ட அனைவருமே அந்த ஜீனியஸுடன் ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டவர்கள்தான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்