"அஜித்தின் ‘உலகம் சுற்றும் வாலிபன்!’ ”

ம.கா.செந்தில்குமார், படம்: தி.குமரகுருபரன்

‘‘‘எங்களுக்கு ஒரு படம் பண்ணுங்க’னு மூணு வருஷமா நாங்க அஜித் சாரைக் கேட்டுட்டிருந்தோம். ஒருநாள் அஜித் சாரிடம் இருந்து எங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் அழைப்பு. ‘வேதாளம்’ படத்துக்கு அடுத்து அதே காம்பினேஷன்ல உங்க பேனருக்குப் படம் பண்றேன்’னு சொன்னார். அவ்வளவு சந்தோஷம். ஆடிப் பெருக்கு அன்னைக்கு பெல்கிரேடில் ‘அஜித்-57’ படப்பிடிப்பு தொடங்கிடுச்சு. 2017-ல் ஏப்ரல் மாசம் படம் ரிலீஸ். ரசிகர்களுக்கு மிகப்பெரிய என்டர்டெயின்மென்ட் காத்திருக்கு’’ - ‘சத்யஜோதி’ டி.ஜி.தியாகராஜனின் பேச்சில் அப்படி ஓர் உற்சாகம். இயக்குநர் மணிரத்னம், ஒளிப்பதிவாளர்கள் ரவி கே.சந்திரன், மணிகண்டன்... உள்பட பல சினிமா ஆளுமைகள் இவரின் அறிமுகங்களே. அப்பா, இவர், தற்போது இவரது மகன்கள் என மூன்று தலைமுறைகளாக டி.ஜி.தியாகராஜன் குடும்பம் சினிமா தயாரிப்பில் உள்ளது!

‘‘என் பெரியப்பா என்.எஸ்.கிருஷ்ணனின் மனைவி டி.ஏ.மதுரம் அம்மாளின் சகோதரிதான் என் அம்மா.  என் அப்பா டி.கோவிந்தராஜன், ஆரம்பத்தில் என்.எஸ்.கே ஃபிலிம்ஸில் எக்ஸிக்யூட்டிவா இருந்தார். பிறகு வீனஸ் கிருஷ்ணமூர்த்தியுடன் சேர்ந்து வீனஸ் பிக்சர்ஸைத் தொடங்கினார். இயக்குநர் ஸ்ரீதருடன் சேர்ந்து இவர்கள் தயாரித்த முதல் படம்தான்  ‘அமரதீபம்’. பிறகு தமிழ், இந்தி, தெலுங்கில் நிறையப் படங்கள் எடுத்தனர். நான் அமெரிக்காவில் எம்.பி.ஏ முடிச்சிட்டு அங்கேயே பேங்க் ஆஃப் அமெரிக்காவில் வேலைக்குச் சேர்ந்தேன். அந்தச் சமயத்தில் வீனஸ் பிக்சர்ஸில் நிறையப் பிரச்னைகள். அதனால நான் சென்னைக்குத் திரும்பி வரவேண்டிய சூழல். அப்பாவும் ஆர்.எம்.வீரப்பன் சாரும் நெருங்கிய நண்பர்கள். ஆர்.எம்.வீரப்பன் சாரின் மகளைத் திருமணம் முடித்தேன். ரஜினி சார் நடித்த ‘ராணுவ வீரன்’ படத்தை சத்யா மூவீஸ் தயாரித்த சமயத்தில், நான் அங்கு வேலைசெய்ய ஆரம்பித்தேன்.

ஆர்.எம்.வீ சாரிடம்தான் சினிமா கத்துக்கிட்டேன். சத்யா மூவீஸ்ல பெரிய கமர்ஷியல் படங்கள் எடுத்துட்டிருந்த சமயத்தில் ‘நம் டேஸ்ட்டுக்கு வித்தியாசமான படங்கள் எடுக்கணும்’னு நினைச்சு, 1980-ம் ஆண்டில் தொடங்கினதுதான் சத்யஜோதி ஃபிலிம்ஸ். ‘அந்த ஏழு நாட்கள்’, ‘மூன்றாம் பிறை’, ‘பகல் நிலவு’னு 36 வருடங்கள்ல 31 படங்களே பண்ணியிருக்கேன். எண்ணிக்கை குறைவா இருந்தாலும் வித்தியாசமான நல்ல படங்கள் பண்ணியிருக்கோம்கிற திருப்தி இருக்கு.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்