ஜென் Z - “நாங்கதான் இப்ப ட்ரெண்டிங்!”

ஜே, விஜி, படங்கள்: கே.ராஜசேகரன், சக்திவேல்

ஹிப்ஹாப் கலாசாரத்தின் இசை வடிவம்தான் `ராப்'. இதற்கு `Rhythmic American Poetry', `Rhythm and Poetry', `Rhythmically Applied Poetry' எனப் பல்வேறு பெயர் காரணங்களைச் சொல்கிறார்கள். சொல்ல நினைப்பதை கொஞ்சம் இசையுடன், நிறையக் கோபம் கலந்து கொடுப்பது என எடுத்துக்கொள்ளலாம். தமிழில் ராப் பாடல்கள் குறைவுதான். சினிமா பாடல்களில் இடையிடையே சில ராப் போர்ஷன்ஸ் வருவது உண்டு. அதைத் தாண்டி, `யூடியூபில் தமிழ் ராப் இருக்கிறதா?' எனத் தேடினோம். `Hi dude' என வாட்ஸ்அப் தட்டியதும் விகடன் ஸ்டுடியோவுக்கே வந்தார்கள்.

``நம்ம ஊர்ல `மியூஸிக்'னாலே சினிமா சாங்ஸ்தான். எனக்கு அது சரியாப்படலை. இத்தனை வருஷத்துல என் கி்டார்ல ஒரு சினிமா பாட்டுகூட வாசிச்சது இல்லை. இசையோட டைமென்ஷன் வேற லெவல். அதை இப்படி கன்ட்ரோல் பண்றது ரொம்பத் தப்பு ப்ரோ. இந்த மாஃபியாக் களை உடைச்செறிஞ்சு, இசையை சுதந்திரமாக்கணும்கிற தாலதான் எங்க பேண்டுக்கு `கூலிப்படை'னு பேரு வெச்சிருக்கோம்’’ - முதல் அடியே ஹெவி பன்ச் கொடுத்து ஆரம்பிக்கிறார் தமிழ் ராப் கலைஞர் சத்யா .

`` `கூலிப்படை'யில நான் ஒரு கிடாரிஸ்ட் அண்ட் சிங்கர். கிடார்னா ரொம்பப் பிடிக்கும். காலேஜ் போனதுக்கு அப்புறம் நானே பாட்டு எழுத ஆரம்பிச்சேன். அப்புறம்தான் `கூலிப்படை'ங்கிற பேர் வெச்சேன். அண்ணா யுனிவர்சிட்டி, மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ்னு நிறைய இடங்கள்ல வாசிச்சிருக்கேன். ஆரம்பத்துல எங்களை பயங்கரமா கிண்டல் பண்ணுவாங்க. ஆனா, பெர்ஃபாமன்ஸ் பண்ண ஆரம்பிச்சதும் அப்படியே அது பாராட்டா மாறிடும்.  இண்டிபெண்டட் மியூஸிஷியன்ஸுக்கு இங்கே பெருசா காசு கிடைக்காது ப்ரோ. இந்த மாதிரி பாராட்டுக்கள்தான் பரிசு. நம்மளோட லைஃப்ல நடக்கிற விஷயங்களை அழகா சொல்ல உதவறதுதான் ராப். நான் ஸ்டீவன் டெய்லர், மைக்கேல் ஜாக்சன் சாங்ஸ் கேட்டுதான் இன்ஸ்பையர் ஆனேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்