“ஸ்டாலின் இன்னொரு ஜெயலலிதா!”

திருமாவளவன் தடாலடிநா.சிபிச்சக்கரவர்த்தி, படம்: தி.குமரகுருபரன் ஓவியம்: கார்த்திகேயன் மேடி

``ஊடக வலிமை இல்லாத எந்த ஒரு கட்சியும் அரசியல் வலிமை பெற முடியாது.  திரைப்படங்கள் வெற்றிகரமாக ஓடவேண்டும் என்றால்கூட, ஊடகம் இப்போது தேவைப்படுகிறது. திரைப்படத்துக்கே அப்படி என்றால், அரசியல் கட்சிகளுக்கு நிச்சயம் ஊடகம் தேவை. அதனால்தான் எங்களுக்கான குரலாக `வெளிச்சம்' என்ற தொலைக்காட்சி சேனலை ஆரம்பித்திருக்கிறோம்''.

`தொல்.திருமாவளவன் தி.மு.க-வை நோக்கி நகர்கிறார், மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விலகுகிறார்' என செய்திகள் வந்துகொண்டிருக்க, அவரோ தங்கள் தொலைக்காட்சிக்கான நிகழ்ச்சித் தயாரிப்புப் பணிகளில் பரபரப்பாக இருக்கிறார்.

``திரைப்படம், ஊடகம் பற்றி நீங்கள் பேசியதால், முதலில் `கபாலி'யில் இருந்தே ஆரம்பிப்போம். படம் பார்த்தீர்களா?''

`` `கபாலி' எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இரு குழுக்களுக்கு இடையே நடக்கும் மோதல் பற்றிய கதைதான் படம். இதில் எங்கேயுமே சாதி முன்நிறுத்தப்படவில்லை; தமிழர் அடையாளம், கொத்தடிமைக் கலாசாரம்தான் முன்நிறுத்தப்படுகின்றன. ஆனால், பா.இரஞ்சித் தலித் சமூகத்தைச் சார்ந்த இயக்குநர் என்ற காரணத்தினாலேயே, அவர் மீது விமர்சனம் வைக்கிறார்கள்.

ரஜினிகாந்துக்குத் தெரியாமல் இரஞ்சித்தால் ஒரு வசனம்கூட படத்தில் பேசவைத்திருக்க முடியாது. சாதி என்ற எல்லைகளைக் கடந்து, சினிமா என்ற அடிப்படையில்தான் படத்தைப் பார்த்திருக்கிறார் ரஜினிகாந்த். இந்த விமர்சனங்களை எல்லாம் கடந்து படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கொச்சையான விமர்சனங்களால் ரஜினிகாந்தையும் இரஞ்சித்தையும் வீழ்த்த முடியாது. படம் பார்த்து முடித்ததுமே இரஞ்சித்தை அழைத்து வாழ்த்தினேன். மகிழ்ச்சி.''

``தற்போது தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடப்பவற்றைக் கவனிக்கிறீர்களா?''

 ``இது சட்டமன்றம் அல்ல; பஜனை மடம். அ.தி.மு.க-வினர் மக்கள் பிரச்னைகளைப் பற்றிப் பேசுவதைவிட... முதலமைச்சருடைய புகழ் பாடுவதற்குதான் அதிக நேரத்தைச் செலவழிக்
கிறார்கள். முக்கியப் பிரச்னைகளில் எல்லாம் தி.மு.க தலைவரை வசைபாடுவது, ஒருமையில் விளிப்பது, அதன் மூலம் சட்டமன்றத்தில் கூச்சல் குழப்பதை ஏற்படுத்துவதுதான் அவர்கள் நோக்கமாக இருக்கிறது. இதனால், மக்களின்  வரிப்பணமும் காலமும் நேரமும்தான் வீணாகின்றன. சபாநாயகர், ஆளும் கட்சி தொண்டரைப்போல செயல்படுகிறார். எதிர்க்கட்சியும் ஆளும் கட்சியும் மக்களுக்கு ஏதாவது செய்ய சட்டமன்றத்தில் வாதிட வேண்டும். எதிர்க்கட்சியும் அடிக்கடி வெளிநடப்பு செய்யாமல் எதிர்ப்பை, கண்டனத்தை அங்கேயே பதிவுசெய்துவிட்டு சட்டமன்றத்தில் பங்கேற்க வேண்டும் என்றுதான் பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்; நாங்களும் எதிர்பார்க்கிறோம்.''

``உள்ளாட்சித் தேர்தல் நெருங்குகிறது. மக்கள் நலக் கூட்டணியில் தே.மு.தி.க இன்னும் நீடிக்கிறதா?''

``தே.மு.தி.க பற்றி இப்போதைக்கு நான் எந்தக் கருத்தையும் சொல்ல முடியாது. ஆனால், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய நான்கு கட்சிகளும் இணைந்தே இந்த உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்கும். சட்டமன்றத் தேர்தலின்போது எங்களோடு தே.மு.தி.க-வும் தமிழ் மாநில காங்கிரஸும் தொகுதி உடன்பாடு மட்டுமே வைத்துக்கொண்டன. அதனால்தான் நாங்கள் `தே.மு.தி.க - மக்கள் நலக் கூட்டணி - த.மா.க' என பெயர் வைத்தோம். மக்கள் நலக் கூட்டணியில் அவர்கள் ஐக்கியமாகியிருந்தால், அவர்களையும் சேர்த்து `மக்கள் நலக் கூட்டணி' என்றே முன்னிலைப்படுத்தியிருப்போம். சட்டமன்றத் தேர்தல் முடிந்துவிட்டது. இனியும் அவர்கள் எங்களோடு தொடர வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை. அதே சமயம் விலகி நிற்பதாலேயே, அவர்கள் வெளியேறிவிட்டதாகவும் சொல்லிவிட முடியாது.''

`` `எனது ராஜதந்திரத்தால்தான் தி.மு.க தோல்வியைச் சந்தித்தது' என ம.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் வைகோ பேசியதாக...''

குறுக்கிடுகிறார். ``அந்த அவையில் நானும் இல்லை; என் கட்சித் தொண்டர்களும் இல்லை. இந்தச் செய்தி, ஊடகத்தில் வந்தது... படித்தேன். அன்று மாலையோ, அடுத்த நாளோ அவரோடு பேசும் வாய்ப்பு கிடைத்தது. `என் தொண்டர்களுக்குப் புரியவைப்பதற்காக, பல விஷயங்களைப் பேசினேன். அதில் இந்தக் கூட்டணி அமைத்ததே ஒரு ராஜதந்திரம் என்று சில விஷயங்களைப் பேசினேனே தவிர, இதுபோல நான் சொல்லவில்லை' என என்னிடத்தில் சொன்னார். அதன் பிறகு இந்த மறுப்புச் செய்தியும் ஊடகத்தில் பதிவு ஆகியிருக்கிறது.''

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்