பாப்பா எப்படி பொறக்குது?

பா.விஜயலட்சுமி, ஓவியம்: ஹாசிப்கான்

‘அப்பா... நான் எப்படி பிறந்தேன்?' - இந்தக் கேள்வியை எதிர்கொள்ளாத பெற்றோரே இருக்க முடியாது. அப்படி ஓர் அப்பாதான் பப்பா; கேள்வி கேட்டுத் துளைப்பது குட்டிப்பையன் பப்பு.

யூடியூபில் சக்கைப்போடு போடும் ‘செக்ஸ் சாட் வித் பப்பு அண்ட் பப்பா’ என்ற இணையத்தொடர் நாயகர்கள் இவர்கள். இதில் பப்புவின் பாலியல்ரீதியிலான சின்னச்சின்னக் கேள்விகளுக்கு பப்பா சொல்லும் க்யூட் பதில்கள் அனைத்தும் செம வைரல். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு உள்ளிட்ட 15 மொழிகளில் வெளியாகவிருக்கும் இந்தத் தொடரின் முதல் இரண்டு எபிசோடுகள், இந்தியில் வெளியாகி இந்தியா முழுக்க  பரபரப்பைக்  கிளப்பியிருக்கின்றன.

`இது யூ.எஸ்.பி கேபிள், இது என்ன... லேப்டாப்.செல்போனை, யூ.எஸ்.பி கேபிள் வழியா  லேப்டாப்போடு இணைக்கும்போது, செல்போன்ல இருக்கும் தகவல்கள் எல்லாமே லேப்டாப்புக்குப் போகுது இல்லையா... அதுபோலதான் அப்பாவோட உயிரணுக்கள், அம்மாவோட கருமுட்டையோடு இணையுது. அப்படித்தான் நீ குட்டிப் பாப்பாவா அம்மா வயித்துக்குள்ள வளர்ந்த’ என, குழந்தைகளிடம் பேசத் தயங்கும் செக்ஸ் ரகசியங்களை அழகான உதாரணங்களின் வழியே பப்புவுக்கு விளக்குகிறார் பப்பா. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்