ஜென் Z - பாட்டாவே பாடிட்டியா!

கே

ப்போது எல்லாம், ரீசார்ஜ் செய்த நெட் பேக் தீர்வதற்குள் ட்ரெண்டே மாறிவிடுகிறது. `வாட்ஸ்அப்பா... கம் டு ஹைக் மேன்' என்கிறார்கள் காலேஜ் கவர்னர்ஸ். தங்கம் விலையைவிட வேகமாக மாறும் இவர்களின் மொபைல் உலகில், இப்போதைய ஹாட்டான விஷயம் ஸ்மூல் (Smule App) செயலி.

 தெருக்கு நான்கு சூப்பர் சிங்கர்கள் உலவும் தமிழ்நாடு இது. போன் பண்ணா, காலர் ட்யூன் வருதா... இல்லை அவங்களே பாடுறாங்களானே தெரியாம முழிக்கிறோம். அந்தச் சிங்கார சிங்கர்களை மனசுலவெச்சு உருவாக்கப்பட்ட கரோக்கி மியூஸிக் ஆப்தான் `ஸ்மூல்'.

இங்கே பாப், ராப், பாலிவுட், கோலிவுட் என பல வகை, பல மொழிப் பாடல்களின் கரோக்கே வெர்ஷன்கள் கிடைக்கின்றன. டவுண்லோடு செய்து, சைன் இன் செய்ததும் அந்தப் பாடல்களைக் கேட்கலாம். பாடல் வரிகள் ஸ்கிரீனில் ஓட, பின்னணியில் இசை மட்டும் நம் ஹெட்போனில் கேட்கும். நாமே கார்த்திக்காகவோ, அனிருத்தாகவோ மாறி பாடி, ரிக்கார்ட் செய்துவிடலாம். இந்த காப்பி - பேஸ்ட் வேலை முடிந்ததும்தான் விஷயமே இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்