ஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 2

Dr. ஆர்.கார்த்திகேயன், படங்கள்: ப.சரவணகுமார், ஓவியம்: கார்த்திகேயன் மேடிதொடர்

நாயகர்களில் இரு வகை உண்டு. லட்சியம் எட்டும் நாயகன், லட்சியம் தவறும் நாயகன். நம்முள் இந்த இருவரும் உண்டு. ஒருவர், `Conquering Hero', இன்னொருவர் `Suffering Hero'.

வெற்றி நாயகர் எந்த எதிர்ப்பையும் முறியடித்து கடைசியில் வெல்வார். எம்.ஜி.ஆர்., ரஜினி, விஜய் போல. ரயிலையே கையில் நிறுத்தும் தெலுங்குப் பட பாலகிருஷ்ணா, கட்டடங்களில் தாவிச் சண்டையிடும் ஜாக்கி சான் எல்லாம் இந்த ரகம்தான்.

துயர நாயகர், எல்லா வலிகளைத் தாங்குவதில் ஹீரோயிசம் காட்டுவார். ரத்தம் கக்கும் `வசந்தமாளிகை' சிவாஜியும் `ஆடுறா ராமா...' கமலும் சிகர உதாரணங்கள்.

இப்போதெல்லாம் பாலா படங்கள் தவிர, துயர நாயகர்கள் வழக்கொழிந்துபோய்விட்டார்கள். ஏன் என்பதைப் பிறகு பார்க்கலாம்.

#கனவு ஹீரோ

அகந்தையை அடிபடாமல் வைத்திருக்கும் Defense Mechanism-களில் இந்தப் பகல் சொப்பனமும் ஒன்று. பஸ்ஸுக்காகக் காத்திருக்கையில் ஆடி காரை ஆடித் தள்ளுபடியில் வாங்குவதுபோல கனா காணலாம். பேருக்கு ஒரு girl friend இல்லாத நிலையிலும் நயன்தாரா போல ஒருவர் உங்களைத் தேடி வந்து காதலிப்பதைக் கற்பனை செய்யலாம்.

அளவுக்கு மீறி தனியாகப் பேச ஆரம்பிக்காத வரை, இது ஓ.கே!

லட்சியம் எட்டும் நாயகன்தான் நம் எல்லோரின் ஆதர்சம். பிடித்த பெண்ணைக் கட்டுவதும், எதிரியை வீழ்த்துவதும் பொது அம்சங்கள். இந்த template-ல் வரும் எல்லா படங்களும் வெற்றிபெறுவது இதனால்தான். இதற்குத் தடையாக உள்ள பிரச்னையும்/ வில்லனும்தான் ஒரு படத்தைச் சுவாரஸ்யப்படுத்து கிறார்கள். `பாட்ஷா', `கில்லி', `சிங்கம்', `தனி ஒருவன்' அனைத்தும் ஒரே ஜாதிதான்.

உங்கள் life script-ல் உள்ள முக்கிய இடர் என்ன எனப் பாருங்கள். அதை எதிர்கொள்வதில்தான் வெற்றி.

பெரும்பாலும் இடர்கள் வெளியே இருப்பது இல்லை.

பகல் சொப்பனம் fantasy. தூங்கும்போது வருவது கனவு dream.

கனவுகளை ஆராய்ந்த உளவியல் பிதா ஃப்ராய்டு Interpretations of Dreams (1900) என்ற புத்தகத்தின் மூலம்தான் Psychoanalysis எனும் கருத்தாக்கத்தை முன்வைத்தார். கனவுகள் நம் ஆழ்மன சஞ்சலங்களின் தெளிப்பு என்றார். கனவுகளின் உள்அர்த்தங்களைப் புரியவைத்தார் ஃப்ராய்டு. தொடர்ந்து வரும் கனவுகளையும், மனிதகுலத்தின் பொதுக் கனவுகளையும் இவரின் சீடர் `கார்ல் யூங்' ஆராய்ந்தார்.

பாம்பைக் கண்டு பயப்படும் கனவும், பரீட்சையில் ஃபெயிலாகும் கனவும், பற்களை இழப்பதாக வரும் கனவும் உலகம் முழுக்க உள்ளதாம்.

நம் கனவுகள் நம்மைப் பற்றிய, நமக்குத் தெரியாத அரிய செய்திகளை நமக்குச் சொல்லும் என்பது உண்மை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்