அறம் பொருள் இன்பம் - 12

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
வ.நாகப்பன்

முதலுக்கு மோசம் வராமல் எப்படி ரிஸ்க் எடுப்பது என்பதை சென்ற வாரம் பார்த்தோம். பாதுகாப்பான முதலீட்டில் பணத்தைப் போட்டுவிட்டு, அது கொடுக்கும் வருமானத்தை மட்டும் வெளியே எடுத்து, கொஞ்சம் ரிஸ்க்கான முதலீடுகளில் போடுவதன் மூலம் நம் வருமானத்தை அதிகப்படுத்த வாய்ப்பு இருக்கிறது என்பது புரிந்திருக்கும். பணவீக்கத்தைத் தாண்டிய வருவாய் பெறுவதே இதன் முக்கிய நோக்கம்.

தவணைமுறை ஆதாயம்!


இனி, தவணைமுறையில் ஆதாயத்தை வெளியே எடுப்பதை நாம் எப்படிச் செயல்படுத்தலாம் என்பதைப் பார்க்கலாம். இதை, இரண்டு கட்டங்களாகச் செயல்படுத்த வேண்டும்.

1. முழுவதும் பங்குச்சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் பெரும் முதலீட்டைப் போட்டுவைக்க வேண்டும். அது டைவர்சிஃபைடு மியூச்சுவல் ஃபண்டு திட்டமாக இருக்கலாம். இல்லையெனில், பங்குச்சந்தை மற்றும் பாதுகாப்பான கடன் பத்திரங்களில் பிரித்து முதலீடு செய்யக்கூடிய பேலன்ஸ்டு மியூச்சுவல் ஃபண்டு திட்டமாகவும் இருக்கலாம். இந்தத் திட்டங்களில் நாம் கொடுக்கும் பணம் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது என்பதால், ரிஸ்க் கொஞ்சம் அதிகமாக இருக்கும். அதே சமயம், ஆதாயமும் வருவாயும் அதிகம் தர வாய்ப்பு உள்ளவை. பணத்தைப் போட்டாச்சு... சரி இனி என்ன?

2. பங்குச்சந்தை அதிகரிக்கும்போது, அதில் முதலீடு செய்துள்ள நம் மியூச்சுவல் ஃபண்டுகளின் யூனிட் மதிப்பும் அதற்கேற்ப உயரும். மாதாமாதம் அல்லது காலாண்டுக்கு/ஆண்டுக்கு ஒருமுறை என இதன் செயல்பாட்டை நாம் தொடர்ந்து ட்ராக் செய்ய வேண்டும். எப்போது எல்லாம் நம் முதலீட்டின் மதிப்பு கணிசமாக உயருகிறதோ, அப்போது எல்லாம் யூனிட்டுகளின் ஒரு பகுதியை விற்றுக் காசாக்கி, அந்த உபரித் தொகையான லாபத்தை வெளியே எடுக்க வேண்டும். அப்படி எடுக்கும் பணத்தை, பாதுகாப்பான வேறு முதலீடுகளில் போட்டுவைக்கலாம்.
ரிஸ்க்கும் எடுத்தாச்சு... லாபமும் பார்த்தாச்சு!

ரிஸ்க் எடுக்கத் தயாராக உள்ள இளம் வயதினருக்கும், ஓய்வுகாலத்துக்குத் திட்டமிடும் நடுத்தரவயதினருக்கும் ஏற்ற முதலீட்டுமுறை இது எனச் சொல்லலாம்.

* உதாரணமாக, ஒரு நல்ல டைவர்சிஃபைடு மியூச்சுவல் ஃபண்டாகத் தேர்ந்தெடுத்து, அதில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்வதாக வைத்துக்கொள்வோம். அன்றைய தேதியில் ஒரு யூனிட்டின் மதிப்பு 10 ரூபாய் எனில், நாம் போடக்கூடிய தொகைக்கு ஈடாக நமக்கு 10,000 யூனிட்டுகள் கிடைக்கும்.

*  ஓர் ஆண்டுக்குப் பிறகு, பங்குகளின் விலை அதிகரித்ததன் காரணமாக நம் முதலீட்டின் மதிப்பும் உயர்ந்து, யூனிட் ஒன்றின் மதிப்பு 12 ரூபாயாக இருப்பதாக வைத்துக்கொள்வோம். இப்போது அந்த லாபத் தொகையான 2 ரூபாயை நாம் வெளியில் எடுக்க வேண்டும். எப்படி?

*  யூனிட் ஒன்றின் இப்போதைய மதிப்பு  12 ரூபாய் எனில், நம் கைவசம் இருக்கும் 10,000 யூனிட்டுகளின் மொத்த மதிப்பு 1.20 லட்சம் ரூபாயாக இருக்கும் அல்லவா? இதில் இருந்து, 20,000 ரூபாய் மதிப்புக்கான யூனிட்டுகளை மற்றும் விற்றுக் காசாக்க வேண்டும்.

*  20,000/12 = 1,666 யூனிட்டுகளை மட்டும் விற்றாலே 20,000 ரூபாய் கிடைக்கும் (1666 x 12). இதை விற்ற பிறகு நம்மிடம் மீதம் இருப்பது 10,000 – 1,666 = 8,334 யூனிட்டுகள். அதன் இப்போதைய மதிப்பு 8,334 x 12 = 1 லட்சம் ரூபாய்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்