10 செகண்ட் கதைகள்

ஓவியங்கள்: ஸ்யாம்

செல்போன் மகிமை!

`` `அம்மனின் மகிமை 'னு ஆயிரம் நோட்டீஸ் அச்சடிச்சுக் குடுக்கிறதுக்குப் பதிலா, செல்போன்ல டைப் பண்ணி ஷேர் பண்ணச்சொல்லுவோம்'' - ஐடியா கொடுத்தான் அரவிந்த்!

-வேம்பார் மு.க.இப்ராஹிம்

ட்ரெய்லர்டா...

``ஒரு மாஸ் ஹீரோ கதை ரெடி பண்ணியிருக்கேன் சார்'' என்றதும் ``கதை எல்லாம் இருக்கட்டும். படத்தோட ட்ரெய்லர் எப்படி இருக்கும்னு மட்டும் சொல்லுங்க'' என்றார் புரொடியூஸர்!

- கோ.பகவான்

நாய்க் கடன்!

காலைக்கடன் கழிக்க வெளியே அழைத்துப்போனார் வளர்ப்பு நாயை, குழந்தைக்கு பேம்ப்பரை மாட்டி வீட்டில் விட்டுவிட்டு!

- பாப்பனப்பட்டு வ.முருகன்

மாறும் காலம்

சண்டே மதியம் `போர் அடிக்குது' என, கொஞ்ச நேரம் டி.வி-யை ஆஃப் செய்தார்கள்!

- பிரகாஷ்.சி

சமையல் கடமை

``நாளைக்குத் தேவையான பிரேக் ஃபாஸ்ட்க்கு மெனு சொன்னீங்கன்னா, ரெடி பண்ணி ஃப்ரிட்ஜ்ல வெச்சுடுவேன்'' என்றாள், முதல் நாளே கணவனிடம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்