ஈழ தாகம் கொல்லும் விஷ ஊசிகள்... முடமாகும் இனம்!

ப.திருமாவேலன், ஓவியம்: ஹாசிப்கான்

ழத்தில் இருந்து இழவுச் செய்தி வந்திருக்கிறது. வேறு என்ன செய்தி வரும்?

அகதி முகாம்களில் இருந்தும் புனர்வாழ்வு முகாம்களில் இருந்தும் வெளியேறிய அல்லது வெளியேற்றப்படும் முன்னாள் போராளிகள், இனம் காணமுடியாத நோய் பாதிக்கப்பட்டு இறந்துவிடுகிறார்கள் என்பதுதான் அந்தக் கொடூரமான செய்தி. இப்படி 103 பேர் இதுவரை இறந்துள்ளனர் எனச் சொல்லப்படுகிறது. இந்த எண்ணிக்கை, இன்னும் உறுதிப்படுத்தப் படவில்லை. எண்ணிக்கை எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம்... இந்த மர்மச்சாவுகளின் மர்மம் என்ன?

`முன்னாள் போராளிகளின் சாவு குறித்து சர்வதேச நாடுகளின் நடவடிக்கையும் விசாரணையும் தேவை' என, இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விடுத்துள்ள அறிவிப்பு விஷச் செய்தியாக வந்து விழுகிறது. `இப்போது உயிருடன் இருக்கும் அனைத்து முன்னாள் போராளிகளையும் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும்' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி-யான சுரேஷ் பிரேமச்சந்திரன் சொல்லி, அதிர்ச்சியை அதிகப்படுத்துகிறார். இலங்கையின் நாடாளுமன்றத்தில் இப்போதைய எம்.பி-யான சிவஞானம்ஸ்ரீ தான் இந்தப் பிரச்னையைக் கிளப்பினார். இதற்கு பதில் அளித்து பேசிய பாதுகாப்புத் துறை துணை அமைச்சர் ருவான் விஜயவர்த்தனா, `இந்தப் பிரச்னைக்கு எந்தவித முக்கியத்துவமும் அளிக்க முடியாது' என அலட்சியமாகப் பதில் அளித்தார்.

இன்னொரு எம்.பி-யான சிவசக்தி ஆனந்தன், இலங்கை நாடாளுமன்றத்தில் பேசும்போது, பட்டவர்த்தனமாக, இரக்கமற்றப் படுகொலையை உடைத்துச் சொல்லிவிடுகிறார். `தடுத்து வைக்கப்பட்ட புனர்வாழ்வு முகாம்களில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் இருந்தார்கள். இவர்களில் பலர், திடீர் திடீரென தொற்றாத நோய்களால் இறக்கிறார்கள். இவர்கள் கைது செய்யப்பட்டபோது போடப்பட்ட ஊசியில், நச்சு ரசாயனம் கலக்கப்பட்டிருந்ததோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. அதனால்தான் இவர்கள் திடீர் திடீரென நோய் பாதிப்பில் இறக்கிறார்கள்'.

இதைத் தொடர்ந்து, சுகாதாரத் துறை அமைச்சர் ராஜித்த சேனா ரத்ன `அனைத்து முன்னாள் போராளிகளுக்கும் மருத்துவப் பரிசோதனை நடத்த தயார்' என அறிவித்திருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்