ஜென் Z - யார் அடுத்த சேவாக்?

கே, படம்: சு.குமரேசன்

``டெஸ்ட்டில் அதிவேக 300. ஒருநாள் போட்டியில் மின்னல்வேக 100... எதில் அதிக எக்ஸைட்மென்ட்?”

``இப்போதைக்கு இரண்டுமே இல்லை. என் ட்வீட் 1,000 ரீட்வீட் ஆவதில்தான் இப்போது எனக்கு ஆர்வம். நான்தான் ரிட்டையர்டு ஆகிவிட்டேனே பாஸ்”

முதல் ஓவர், முதல் பந்தையே பௌண்டரிக்கு பார்சல் பண்ணும் அதே வேகத்தில் பதில் வருகிறது வீரேந்தர் சேவாக்கிடம் இருந்து. தமிழ்நாடு பிரிமீயர் லீக் புரமோஷனுக்காக சென்னைக்கு வந்திருந்த
வரைச் சந்தித்து சில யார்க்கர்களை வீசினேன்.

``ஆல்ரெடி ஐ.பி.எல் இருக்கு... இன்னொரு லீக் தேவையா?”

``மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடுபவர் களுக்கு தமிழ்நாடு பிரிமீயர் லீக் அருமையான வாய்ப்பு. நன்றாக விளையாடினால், உடனே ரஞ்சியிலோ, ஐ.பி.எல்-லிலோ விளையாடும் வாய்ப்பு கிடைக்கலாம். நான் சிறுநகரத்தில் இருந்து வந்தவன். அவர்கள் கஷ்டம் எனக்குத் தெரியும்.  மதுரை சூப்பர் ஜெயன்ட்ஸ்தான் நம்ம டீம்.”

``ஐபிஎல்-லில் 4 வெளிநாட்டு வீரர்கள் போல, இதில் மற்ற மாநில வீரர்கள் கலந்துக்கொள்ள அனுமதிக்கலாமா?”

``நிச்சயமாக இல்லை... ஒவ்வோர் அணியிலும் 11 தமிழக இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. அதுதான் முக்கியம். ”

``டி20-ல் அதிரடியாக ஆடுபவர்கள் டெஸ்ட் போட்டியில் கலக்கமுடியுமா?”

``ரன் அடிப்பது எப்படி என்பதுதான் முக்கியம். அது தெரிந்தால் எந்த ஃபார்மட்டிலும் ரன் அடிக்கலாம். கிரிக்கெட் மாறிக்கொண்டே இருக்கிறது. டெஸ்ட் போட்டியிலே ஓப்பனர்கள் ஸ்லிப், கவர் ஏரியாவில் ஃபீல்டர்களின் தலைக்கு மேல் அடித்து ரன் சேர்க்கிறார்கள். கிரிக்கெட் மாறவில்லை. பேட்ஸ்மென்களின் அப்ரோச் மாறியிருக்கிறது.”

`டி20 போட்டிகள் பேட்ஸ்மென்களை மட்டுமே உருவாக்குகிறதா?”

``நிச்சயமாக இல்லை. அஷ்வின், பும்ரா, புவனேஷ்குமார் எல்லோருமே டி20-ல் நன்றாக விளையாடி இப்போது 50 ஓவர், டெஸ்ட் விளையாடுகிறார்கள். பெர்ஃபாமன்ஸ்தான் முக்கியம். ஃபார்மட் இல்லை.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்