ஜென் Z - பாவம்டா நாங்க!

வித்யா விஜயராகவன், படம்: மீ.நிவேதன்

லகி்லேயே கஷ்டம் எது தெரியுமா?

கல்லூரிக்குச் செல்வதும், அதைப் பற்றிய உறவினர்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்வதும்தான். ஸ்கூல் படிக்கிறப்ப ‘என்ன ரேங்க்?’னு மட்டும்தான் கேட்பாங்க. கல்லூரியில் சேர்ந்த பின்னாடி ‘எந்த காலேஜ், அந்த காலேஜ்ல கிடைக்கலையா, எவ்ளோ பெர்சன்டேஜ், எவ்ளோ அரியர், அடுத்து என்ன செய்யப் போற? `InsuranceisaSubjectMatterOfSolicitation’-கிற மாதிரி கேப் விடாமல் பேசிட்டே போவாங்க.

நல்ல மார்க் எடுத்து, நல்ல கல்லூரியில் சேர்ந்தவங்க போக மிஞ்சி இருப்பவங்க கல்லூரிப் பெயரைச் சொல்லவே, கொரியா மொபைல் ஓனர் மாதிரி முழிக்கணும். மீறிச் சொன்னாலும், ‘ஏம்பா... அப்படி ஒரு காலேஜ் இருக்கா?’னு அசிங்கப்படுத்துவார்கள்.

இப்படி பல அவமானங்களை எல்லாம் தாண்டிதான் கல்லூரிக்குப் போறோம். நுழையும்போதே வாசலில் வெட்கம், மானம்... இன்னும் எக்ஸ்ட்ரா எல்லாத்தையும் கழட்டிவெச்சுட்டுத்தான் நுழையணும். நின்னா திட்டு, நடந்தா மன்னிப்புக் கடிதம், பேசினால் அரியர்... என அங்கே பயங்கரங்கள் ஏராளம். திட்டுறது, அசிங்கப்படுத்துறது, வெளியே அனுப்புறது, ஆப்சென்ட் போடுறது, அரியர் என பல  பஞ்ச பிரம்மாஸ்திரங்கள் வீசப்படும். எல்லாத்தையும் சமாளிச்சு, கெத்தா, ஸ்டைலா நின்னா கடைசி ஆயுதமா ‘அம்மா அப்பாவைக் கூட்டிட்டு வா’ னு சொல்வாங்க.

`பிரேமம்’ பட அப்பாபோல் இருந்தாதான் பரவாயில்லையே. நமக்கு வாய்த்தது எல்லாம் கஞ்சிபோட்டு அயர்ன்செய்த முகத்துடன் முறைத்துக்கொண்டே இருக்கும் அப்பாவாயிற்றே. ‘உங்க பையன்/பொண்ணு...’ என அவர்கள் ஆரம்பிக்கும் முன்னாடியே ‘இது எங்கே உருப்படப்போவுது’னு இவங்க கூட்டணி போடுவாங்க. இரண்டு பக்கமும் துப்பி முடிச்சதும், ஒண்ணுமே நடக்காததுபோல முகத்தைவெச்சுக்கிறப்ப எல்லா அவார்டும் நம் பாக்கெட்டில்தான்.

முக்கியப் பிரச்னை... காசு. ரெக்கார்டு நோட்டு தொடங்கி ரெட் புல் வரை கணக்கு காட்டி வீட்டில் காசு வாங்கிறதுக்குள்ள டயர்டாகிடும்.

இதை எல்லாம் சமாளிச்சு நல்ல மார்க் வாங்கி, கேம்பஸ் இன்டர்வியூல சூப்பர் கம்பெனியில சமர்த்தா ஆஃபர் லெட்டர் வாங்கி, வேலையில சேர்ந்து, முதல் மாத சம்பளத்துல நெய் மைசூர்பாகுடன் அந்த முதல் பாரா சொந்தக்காரர்களுக்குக் கொடுக்கப்போனா கேட்பாங்க பாருங்க ஒரு கேள்வி... 

‘என்னப்பா 15 ஆயிரம்தான் சம்பளமா?’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்