உணவு நல்லது வேண்டும்!

ஆப்பிள் - பேரிக்காய் ஜூஸ்

தேவையானவை: ஆப்பிள் - 1, பேரிக்காய் சிறியது - 2.

செய்முறை: ஆப்பிள், பேரிக்காய்களை தோல், விதை நீக்கி, சிறிய துண்டுகளாக வெட்டி, சிறிது நீர் சேர்த்து, மிக்ஸியில் நன்கு அரைக்க வேண்டும். சர்க்கரை வேண்டாம்; பழங்களின் இனிப்புச் சுவையே போதுமானது.

பலன்கள்

* வைட்டமின் ஏ, சி, கே மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட தாதுஉப்புக்கள் நிறைந்துள்ளன.

* சருமம் பொலிவுபெறும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், நோய்கள் அண்டாது.

* இதய நோயாளிகள், சிறுநீரகத்தில் கற்கள் இருப்பவர்கள், புற்றுநோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ஏற்றது.

* சர்க்கரை நோயாளிகள் பழங்களை ஜூஸாகச் சாப்பிடாமல், அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது.

* குழந்தைகள், கர்ப்பிணிகள் இதை அருந்தலாம். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிக அளவு உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்