திரைத்தொண்டர் - 21

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
அமரர் பஞ்சு அருணாசலம்

 

திரைப்பட எழுத்தாளர், தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம், `திரைத்தொண்டர்’ தொடர் மூலமாக தன் அனுபவங்களைப் பகிர்ந்துவந்தார். திடீரென நிகழ்ந்த அவரின் மரணம், நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரின் ஆன்மா சாந்தியடைய, விகடன் பிரார்த்திக்கிறான். ‘வாராவாரம் நம்மகிட்ட பேசிட்டு இருந்த ஒருத்தர் திடீர்னு பேசுறதை நிறுத்திட்டா எப்படி இருக்குமோ, அப்படி இருக்கு அவரின் மரணம்!’ பல வாசகர்கள் இப்படிப் பல்வேறு வார்த்தைகளில் தங்களின் வருத்தங்களைப் பகிர்ந்துகொண்டனர். அவற்றின் மூலம் இந்தத் தொடர் வாசகர்களிடம் எந்த அளவுக்குச் சென்று சேர்ந்திருக்கிறது என்பதை உணர முடிகிறது. பஞ்சு அருணாசலம் அவர்கள் ஏற்கெனவே பகிர்ந்த தகவல்கள், தொகுக்கப்பட்டு ‘திரைத்தொண்டர்’ தொடர் தொடரும்.

- ஆசிரியர்


‘ச
கலகலா வல்லவன்’ ஸ்கிரிப்ட்டைச் சொன்னதுமே, இளையராஜா ட்யூன் போட்டு பாடல்களைப் பதிவுசெய்து விட்டார். ‘கட்ட வண்டி கட்ட வண்டி...’, `இளமை இதோ இதோ...’, `நேத்து ராத்திரி யம்மா...’, `நிலா காயுது...’ என அனைத்துத் தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் மாஸான பாடல்களைத் தந்தார். இன்னொரு பக்கம் கமல் சாருடன் அம்பிகா, ரவீந்தர், வி.கே.ஆர்., தேங்காய் சீனிவான் என ஏகப்பட்ட ஆர்ட்டிஸ்ட்களை ஃபிக்ஸ்செய்து ஷூட்டிங்கைத் தொடங்கினோம். க்ளைமாக்ஸை மட்டும் முடிவுபண்ணாமல் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. கமர்ஷியல் படம் என்பதால், சண்டைக்காட்சியுடன் முடிவதுபோல ஒரு க்ளைமாக்ஸ் சொல்லியிருந்தேன்.

‘நீங்க சொல்ற க்ளைமாக்ஸ் நல்லாயிருக்கு. ஆனா, ‘முரட்டுக்காளை’ அளவுக்கு க்ளைமாக்ஸை மக்கள் எதிர்பார்ப்பாங்களே. அந்த மாதிரி ஏதாவது வேணுமே’ என்றார் சரவணன் சார். ‘நான் யோசிக்கிறேன் சார்’ எனச் சொல்லிவிட்டு வந்துவிட்டேன். ஆனால், ‘முரட்டுக்காளை’ படத்தில் க்ளைமாக்ஸை ரயிலில் வைத்தோம். இதைக் கப்பலில் வைப்பதா? கதையை எப்படி கப்பலுடன் லிங்க் பண்ணுவது?’ - இப்படி எனக்குள் நிறையக் கேள்விகள். எனக்கு எதுவுமே தோணவில்லை. ‘சார்... நான் எவ்வளவோ யோசிச்சேன். இந்தக் கதையில வெளியே போய் க்ளைமாக்ஸ் பண்ண வழியே இல்லை. நான் எழுதின க்ளைமாக்ஸையே வெச்சுடுங்க. ஆனா ஒரு மாற்றம், அந்த வீட்டுல நெருப்பு எரியுது...அதுல சண்டைக்காட்சி. நிச்சயமா நல்லா வரும்’ என்றேன்.

‘செட்டுல நெருப்பு வைக்கணுமே’ என, முத்துராமன் சார் மட்டும் கொஞ்சம் யோசித்தார். பிறகு அவரும் ஓ.கே சொல்லிவிட்டார். சரவணன் சாருக்கும் திருப்தி. ஜூடோ ரத்னம் மாஸ்டர் சண்டைக்காட்சிகளை அமைத்தார். ‘நெருப்புல பண்றது ரொம்ப ரிஸ்க் சார். டூப் போட்டுக்கலாம்’ என முத்துராமன் சொன்னதை, கமல் சார் ஏற்றுக்கொள்ளவே இல்லை. டூப் போடாமல் அவரே நடித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்