தர்மதுரை - சினிமா விமர்சனம்

ளிய கதை. இயல்பான மனிதர்கள். மனதை நெகிழ்த்தும் பாடங்கள். அன்பானவர்கள் அபத்தங்களுக்குள் சிக்கி மீளும் அற்புதமே கதை.

டாஸ்மாக்கே கதி எனக் கிடக்கும் டாக்டர் விஜய் சேதுபதி, தன் சகோதரர்களின் தொழிலுக்கே வேட்டுவைக்கிறார். பதிலுக்கு விஜய்சேதுபதியை ஒரு வழி பண்ண அவர்கள் திட்டம்தீட்ட... தப்பித்து, தான் படித்தக் கல்லூரிக்குச் செல்கிறார். அங்கே பழைய நினைவுகளில் மூழ்கும் விஜய் சேதுபதி, ஒவ்வொரு நண்பராகத் தேடிச் செல்கிறார். நல்ல மாணவன் குடிகாரன் ஆனது ஏன், கல்லூரி நண்பர்கள் இப்போது என்ன செய்கிறார்கள், விஜய் சேதுபதியின் வாழ்க்கை என்ன ஆனது என்பதுதான் கதை.

`நான் பார்த்துக்கிறேன் பாஸ்!' என இயக்குநரைக் கைப்பிடித்து அழைத்துச் சென்றிருக்கிறார் விஜய் சேதுபதி. அழுவதும் அழவைப்பதுமாக எல்லா எமோஷன்களிலும் எக்கச்சக்க பெர்ஃபார்மன்ஸ். தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே என மூன்று நாயகிகள். அதில் ஐஸ்வர்யா... அழகி.  காமக்காபட்டி அன்புச்செல்விதான் படத்தின் தாயம்மா. அம்மா ராதிகா, சகோதரர்கள், எம்.எஸ்.பாஸ்கர்... என ஒவ்வொருவரும் போட்டிபோட்டு நடித்திருக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்