"குஷ்புவுக்குதான் ஓட்டு போடுவேன்!”

நா.சிபிச்சக்கரவர்த்தி

“ஜாலி கேள்விகள்தானே... ஐ யம் ரெடி” என எனர்ஜியாகப் பேசுகிறார் இயக்குநர் இராதாகிருஷ்ணன் பார்த்திபன்.

“ஆஹா... இந்த வாரம் நான் மாட்டிக்கிட்டேனா?” - மகிழ்ச்சி ஸ்மைலியோடு தயாராகிறார் கவிஞர் லீனா மணிமேகலை.

“நான் இந்த கேள்வி பதில் பகுதியை விகடன்ல விரும்பிப் படிப்பேன். கொஞ்சம் ஈஸியா கேளுங்க. ஸ்மார்ட்டா பதில் சொல்றேன்” - வெள்ளந்தியாகச் சிரிக்கிறார் இயக்குநர் ஜெர்ரி.

“தல... லைன்லயே இருங்க, கூகுள் ஆண்டவரை ஓப்பன் பண்ணிவெச்சுக்கிறேன். என்னது... பிட் அடிக்கக் கூடாதா!” - யோசனையோடு ஓ.கே சொல்கிறார் நடிகர் கலையரசன்.

``தமிழ்நாடு அரசின் மொத்தக் கடன் எவ்வளவு?''

விடை: ரூ.2,41,031 கோடி

இராதாகிருஷ்ணன் பார்த்திபன்: “மொத்தக் கடனா? (யோசிக்கிறார்) 10 கோடியில் ஒரு பங்கு என் தலை மேல இருக்குங்கிற வருத்தம்தான் எனக்கு இருக்கு. மத்தபடி எனக்கு எந்தக் கடனும் கிடையாது.”

லீனா மணிமேகலை: “ஏதோ ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்னு படிச்சதா ஞாபகம். ‘இந்த அம்மா ஆட்சியில் இலவசங்களைக் கொடுத்துக் கொடுத்து, கடனை மட்டும்தான் ஏத்திவெச்சிருக்காங்க’னு விவாதங்கள் எல்லாம் போயிட்டிருந்தது. இத்தனை நம்பருக்கு எத்தனை ஜீரோ வரும்னு மனசுல யோசிச்சப்பவே கடன் எவ்வளவுனு மறந்துட்டேனே.”

ஜெர்ரி: “ரெண்டு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகம்னு நினைக்கிறேன். ஆனா, இந்தக் கடனை அடைக்க என்ன திட்டம் வெச்சிருக்காங்கனுதான் தெரியலை.”

கலையரசன்: ஷாக் ஆனவர், “தல... இந்தக் கேள்வியில இருந்து நான் எஸ் ஆகிடவா? உங்க கேள்விகள்ல சிக்கிச் சிதைஞ்சுடுவேன்போல. ஏதோ ஒன்றரை லட்சமோ ரெண்டரை லட்சம் கோடி ரூபாயோ சொன்னாங்க. உத்தேசமாப் போட்டுக்கங்க.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்