ஜென் Z - எக்ஸ்ட்ரா டிக்கெட்!

விஜி, படங்கள்: கே.ராஜசேகரன்

`கபாலி’ பட FDFS டிக்கெட் கிடைத்தவர்கள் பாக்கியசாலிகள்! அதே சமயம், கடைசி நேர சிக்கலால் தியேட்டருக்குப் போக முடியாதவர்களின் டிக்கெட் கிடைத்து படம் பார்த்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.

`இதுக்காக தியேட்டர் வாசல்ல போய், வாட்ச்மேனாக முடியுமா?' என்கிறீர்களா? இல்லை ப்ரோ. உங்க ஃபேஸ்புக்கைத் திறந்தாலே டிக்கெட் கிடைக்கும்!

ஃபேஸ்புக்கில் ‘மூவி டிக்கெட் மார்க்கெட்’  குரூப்பை 60,000 லைக்ஸோடு நடத்திவருகிறார்கள் வருண் வரதராஜன் மற்றும் தீபிகா அருண். அண்ணன், தங்கையான இவர்கள் ஜாலியாக ஆரம்பித்த ஒரு குரூப்தான் இன்று நிறைய சினிமா ஆர்வலர்களுக்கு டிக்கெட் பிரச்னையைத் தீர்த்துவைத்துக்கொண்டிருக்கிறது.

``நண்பர்களோடு குரூப்பா படத்துக்குப் போகலாம்னு மொத்தமா டிக்கெட் புக் பண்ணியிருப்போம். ஆனா, அதுல ஒரு நாலு பேர் கடைசி நேரத்தில் வர மாட்டாங்க. அந்த டைம்ல ‘நீ வர்றியா...

நீ வர்றியா?’னு வேற நண்பர்களுக்கு போன் பண்ணிக் கேட்கணும். இந்தப் பிரச்னை எல்லாருக்குமே இருக்குங்கிறதை யோசிச்சுத்தான் ஜூலை 2012-ல் இந்த குரூப் ஆரம்பிச்சோம். இந்த குரூப்புல, உங்ககிட்ட இருக்கிற எக்ஸ்ட்ரா டிக்கெட்ஸோட தகவல்களை ஷேர் பண்ணா, வேணும்கிறவங்க அதை வாங்கிப்பாங்க. ஆன்லைன் டிக்கெட்னா பணப் பரிமாற்றமும் ஆன்லைன்லயே பண்ணிக்கலாம். இல்லைன்னா, தியேட்டர்ல டிக்கெட் கொடுத்துட்டு காசை வாங்கிக்கலாம்'’ என்கிறார் வருண்.

‘`நாங்க இதை இன்னும் பிசினஸா பண்ணலை. ஃபேஸ்புக்கில் பெரும்பாலும் ஃபேக் ஐடிஸ் நிறைய இருப்பாங்க. இதை பிசினஸா செய்யணும்னா அதுக்கு நம்பகத்தன்மை முக்கியம்'' என்கிறார் தீபிகா.
திடீர் என ஒரு படம் பார்க்கத் தோன்றுகிறது. டிக்கெட் இல்லை என்றால் கவலையே பட வேண்டாம். சென்னைவாசிகள் மொபைலை எடுத்து ஃபேஸ்புக்கில் ‘மூவி டிக்கெட் மார்க்கெட்’ மூலமா படத்தையும் டிக்கெட்டையும் செலெக்ட் பண்ணிக்கலாம். ஸ்டார்ட்அப் தொடங்க தேவை மூலதனம் அல்ல, வித்தியாசமான ஐடியாதான். அப்படி பல ஐடியாக்களோடு காத்திருக்கிறது இந்த பிரதர்-சிஸ்டர் கூட்டணி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்