ஜென் Z - வீடியோ சாட்... விசிட்டிங் கார்ட்!

ஞா.சுதாகர்

ப்பிளின் ஃபேஸ்டைமையும் ஸ்கைப்பையும் பார்த்து `Hey oldies... Plz move' என்கிறது கூகுளின் டியோ (Duo). எளிமையான, அதே சமயம் எக்கச்சக்க எக்ஸைட்மென்ட்களோடு வந்திருக்கிறது இந்தப் புதிய வீடியோ காலிங் ஆப்!

ஏற்கெனவே ட்ரெண்டில் இருக்கும் ஆப்பிளின் ஃபேஸ்டைம் (Facetime) மற்றும் ஸ்கைப்பை (Skype) ஓரங்கட்டுவதுதான் டியோவுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் அசைன்மென்ட். அதைப் பக்காவாகச் செய்துவருகிறது டியோ. ஃபேஸ்டைம், ஐபோனில் கிங்தான். ஆனால், ஆண்ட்ராய்டு பக்கம் ஆப்சென்ட். ஸ்கைப், மெசெஞ்சர், ஏன்... கூகுளின் ஹேங்-அவுட்கூட, நம் 2G வேகத்துக்கு `நீ அதுக்கு சரிப்பட்டு வர மாட்ட' என நாம் ஒதுக்கியவைதான்! இதை மனதில் வைத்தே டியோவைச் செதுக்கியுள்ளது கூகுள்!

வாட்ஸ்அப் போலவே எண்ட் டு எண்ட் என்கிரிப்ட் செய்யப்பட்டது என்பதால், பாதுகாப்பும் கியாரன்ட்டி. 2G, 3G மற்றும் வைஃபை என எந்த கிரவுண்டிலும் ஸ்கோர்செய்வது டியோவின் மற்றொரு பலம். கூடுதலாக டியோவின் சிக்னேச்சர் ஷாட்டாக வந்திருப்பது knock-to-Knock. ஒருவர் நமக்கு கால் செய்யும்போது, அவரின் முகம் நாம் கால்-ஐ அட்டெண்ட் செய்வதற்கு முன்னரே டிஸ்ப்ளேவில் தெரியும். இந்த knock-to-Knock-ஐ பெருமையாகவே சொல்லிக்கொள்கிறது கூகுள். இதை டிஸ்ஸேபிள் செய்யவும் முடியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்