விடைபெறுகிறார் ஒபாமா! - சாதித்தது என்ன?

மருதன்

வம்பர் 8-ம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலைத் தீர்மானிக்கப் போகிறவர், ஹிலாரி கிளின்டனோ, டொனால்ட் டிரம்போ அல்ல; பராக் ஒபாமாதான்.

முதல் கறுப்பின அதிபர்!

`எந்த ஓர் அதிபரும் இரண்டு முறைக்கு மேல் தேர்தலில் நிற்கக் கூடாது' என்னும் விதியைத் தாண்டி, இந்த முறையும் ஒபாமாவே அமெரிக்க வாக்காளர்களின் சிந்தனையில் நிறைந்திருக்கப் போகிறார். ஹிலாரியை அவர்கள் தேர்ந்தெடுத் தால், ஒபாமாவை அவர்கள் மூன்றாவது முறையாக ஏற்றுக்கொண்டுவிட்டனர் எனப் பொருள். ஒருவேளை டிரம்பைத் தேர்ந்தெடுத்தால், ஒபாமாவின் ஆட்சி மீது அவர்களுக்கு திருப்தி இல்லை என புரிந்துகொள்ளலாம். அந்த வகையில், எதிர்வரும் தேர்தல் ஒருவிதத்தில் ஒபாமா ஆட்சி மீதான வாக்கெடுப்பாகவே இருக்கும்!

எனவே அமெரிக்காவின் முதல் கறுப்பின அதிபரான ஒபாமாவின் வெற்றி-தோல்விகளைக் கணக்கிடும் பணி, மும்முரமாகிவிட்டது. ஒபாமாவின் ஆட்சியை எப்படி மதிப்பிடுவது? வரலாற்றில் அவர் பெயர் நிலைத்திருக்குமா, உதிர்ந்துவிடுமா? எதிர்காலத் தலைமுறை, ஒபாமாவின் ஆட்சியை எப்படி நினைவில் வைத்திருக்கும்? இன்னும் 20 ஆண்டுகள் கழித்து ஒபாமாவின் பிம்பம் எப்படி உருப்பெற்றிருக்கும்? இந்தக் கேள்விகளுக்கு விடை காண, ஒபாமா செய்தவை... செய்யத் தவறியவை இரண்டையும் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம்.

 குவந்தனாமோ சிறைச்சாலை!

அமெரிக்காவுக்கு வெளியில் இருந்தே தொடங்குவோம். 2009-ம் ஆண்டு அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காலம் தொடங்கி, கியூபாவில் உள்ள குவந்தனாமோ சிறைச்சாலையை மூடுவது குறித்து அடிக்கடி பேசியிருக்கிறார் ஒபாமா. `போர்க் குற்றவாளிகள்' என அமெரிக்காவால் குற்றம்சாட்டப்பட்டு, புஷ் காலம் தொடங்கி நூற்றுக்கணக்கானவர்கள் இங்கே விசாரணையின்றி அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். ‘இப்படி ஒரு சிறைச்சாலை இயங்குவது பயங்கரவாத இயக்கங்களுக்குத் தீனிபோடும் விஷயம்.அமெரிக்கா இதை நடத்துவது அறம் அல்ல’ என வெளிப்படையாக அறிவிக்கவும் செய்தார். கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதிகூட 15 பேர் குவந்தனாமோவில் இருந்து மாற்றப்பட்டார்கள். இருந்தும் ஒபாமாவால் சிறைச்சாலையை மூட முடியவில்லை.

 அல் கொய்தா டு ஐ.எஸ்.ஐ.எஸ்!

2011, மே 1-ம் தேதி ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டபோது, அமெரிக்காவைக் கடந்து உலகம் முழுவதிலும் இருந்து ஒபாமாவுக்குப் பாராட்டுக்கள் குவிந்தன. ஜார்ஜ் புஷ் தொடங்கிய பயங்கரவாதத்துக்கு எதிரான போரை ஒபாமா முடித்துவிட்டதாகவும் சிலர் குறிப்பிட்டு மகிழ்ந்தார்கள். ஒசாமாவின் மரணத்துக்குப் பிறகு உலகின் நம்பர் 1 பயங்கரவாத இயக்கமாகக் கருதப்பட்ட அல் கொய்தா வீழ்ச்சியடைந்ததையும், இன்றைய தேதி வரை முடங்கியே கிடப்பதையும் ஒபாமாவின் தனிப்பட்ட சாதனையாக அவர்கள் முன்னிறுத்துகிறார்கள். ஆனால், அல் கொய்தாவின் வீழ்ச்சி பயங்கரவாதத்தின் ஒட்டுமொத்த வீழ்ச்சியாக இல்லாமல், ஓர் அத்தியாயத்தின் முடிவாக மட்டுமே மாறிப்போனது. ஐ.எஸ்.ஐ.எஸ் என்னும் இயக்கம் அல்கொய்தாவைக் காட்டிலும் பல மடங்கு அதிக ஆபத்தை, அதிக சேதத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.

ஈராக் டு லிபியா டு சிரியா

`ஜார்ஜ் புஷ்ஷின் போர்களை முடிவுக்குக் கொண்டுவருவேன்' என அறிவித்த ஒபாமாவுக்கு, அவர் ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. `ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படைகள் படிப்படியாக விலக்கிக்கொள்ளப்படும். ஈராக்கில் ஜனநாயகம் தழைப்பது உறுதிசெய்யப்படும்' என ஒபாமா அறிவித்தபோது, அவர் அடிக்கடி சொன்ன ‘மாற்றம்’ நிகழ்ந்துவிட்டதாகவே பலரும் நம்பினர். `அமெரிக்க வீரர் ஒருவர்கூட ஈராக்கின் மண்ணில் தங்கியிருக்க மாட்டார்' என ஆகஸ்ட் 2010-ம் ஆண்டில் ஒபாமா முழங்கினார். ஆனால் 3,000-க்கும் அதிகமான அமெரிக்க வீரர்கள் ‘ஈராக் படைகளுக்கு உதவி செய்வதற்காக’ இன்றும் அங்கு  நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். `ஐ.எஸ்.ஐ.எஸ் அபாயத்தைத் தடுக்கவே இந்த ஏற்பாடு' என்கிறார் ஒபாமா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்