கலைடாஸ்கோப் - 25

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
எண்ணம் வண்ணம்: சந்தோஷ் நாராயணன்

`` `ஆதியிலே வார்த்தை இருந்தது’ என பைபிளில் யோவான் அதிகாரம் ஒன்று, முதல் வசனம் ஆரம்பிக்கிறது. விழிப்பு, கனவு, தூக்கம் இவற்றைத் தாண்டிய நான்காவது நிலையாக அந்த ஒலியை மாண்டூக்கிய உபநிஷத் கூறுகிறது’’ என்றான் அக்கவுஸ்ட்டிக் இன்ஜினீயர் அனந்தன், ஒலி ஆய்வாளன். குழுவினர், அவனை வைத்த காது வாங்காமல் கேட்டனர்.
``நமது அறிவியல் மொழியில் சொன்னால்,  பெருவெடிப்புக்கு முந்தைய நிலை. அந்த வார்த்தையை, அதாவது அந்த ஒலியைப் பதிவுபண்ணவே இந்த முயற்சி. காலத்தில் பின்னோக்கி நான் அனுப்பிய `நானோ சோனிக் ரிக்கார்டர்’ தாங்கிய டைம் மெஷின் அதைப் பதிவுசெய்து நமக்கு இப்போது அனுப்பும்’’ என்றான்.

விண்கலம் அனுப்பும் ரேடியோ வேவ்ஸை, எலெக்ட்ரான்களின் உதவியுடன் சவுண்டு வேவ்ஸாக மாற்றி, ஒலிபரப்பும் நியோனிய ஸ்பீக்கர்கள் தயாராக இருந்தன.

``இந்த நீல நிற எல்.இ.டி லைட் ஒளிரும்போது நாம் அந்த ஆதி ஒலியை ஐந்து நொடிகளில் கேட்கப்போகிறோம்’’ என்றபடி தயார் ஆனான். எல்லோரும் பரபரப்பாக காதுகளைக் கூர்மையாக்கிக்கொண்டனர்.

``5, 4, 3, 2, 1.’’

லைட் ஒளிரவே இல்லை. ``ஷிட்... வாட் ஹேப்பெண்டு?’’ எனக் கத்தினான். `என்ன ஆச்சு இந்த இயந்திரத்துக்கு?’ மனம் கொந்தளித்தது. `இத்தனை நாள் ஆராய்ச்சி எல்லாம் வீணா?’ அப்படியே நாற்காலியில் சாய்ந்தான்.

குழுவினர் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர்.

`ஏன் இந்த அவசரம்..? ஈஸி ஈஸி’ என உள்ளுக்குள் சொல்லிக்கொண்டான். மனதில் கொஞ்சம் கொஞ்சமாக அலை அடங்குவதை, மூச்சு நிதானமாவதை அறிந்தான்.

மெள்ள காதுக்குள் அதை ஆழமாக உணர்ந்தான். அமைதி, பேரமைதி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்