ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

விகடன் வாசகர்களுக்கு வணக்கம், நான் சுப.வீரபாண்டியன் பேசுகிறேன்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இது தேர்தல் காலம். தேர்தல் காலத்து அரசியலுக்கும் அன்றாட அரசியலுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. தேர்தல் காலத்தில் திடீர் திடீர் என பல புதிய கட்சிகள் உருவாகும். தேர்தலுக்குப் பிறகு பல கட்சிகளும் காட்சிகளும் காணாமல்போகும். பலர் கட்சி மாறிக்கொண்டே இருப்பார்கள். கட்சித் தாவல்கள், மாற்றங்கள் போன்றவை இயல்பான ஒன்றாக இருக்கும். தேர்தல் காலத்து அறிக்கைகள் பரபரப்பானதாக இருக்கும். நேற்று நண்பர்களாக இருந்தவர்கள், இன்று பகைவர்களாக மாறிவிடுவார்கள். நேற்று கடுமையாக வசைபாடியவர்கள், இன்று திடீர் நண்பர்கள் ஆவார்கள். இதை எல்லாம் சகித்துக்கொண்டு மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். தேர்தல் காலத்தில் நம்மைச் சுற்றி இன்னும் என்னவெல்லாம் நடக்கின்றன என்பதைச் சொல்கிறேன்.

இந்தியாவின் முதல் தேர்தல், 1952-ம் ஆண்டு நடைபெற்றது. அப்போது தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றியிருந்தாலும், அது தேர்தலில் போட்டியிடவில்லை. எனவே, திராவிடக் கட்சிகள் போட்டியிடாத தேர்தல் என இந்தத் தேர்தலைச் சொல்லலாம். ஆனால், தந்தை பெரியார் தலைமையில் இயங்கிய ‘திராவிடர் கழகம்’, அறிஞர் அண்ணா தலைமையில் இயங்கிய ‘திராவிட முன்னேற்றக் கழகம்’ இரண்டும் எதிரும் புதிருமாகப் பிரிந்திருந்தாலும், அவை 1952-ம் ஆண்டு  தேர்தலில் பொதுவுடைமைக் கட்சிகளை ஆதரித்தன. அப்போது நடந்த வரலாற்றுச் சம்பவங்களைத் தொகுத்துச் சொல்கிறேன்.

தமிழ்நாட்டில் எப்போது கூட்டணி அரசியல் தோன்றியது? அதை முதன்முதலில் தொடங்கியது அறிஞர் அண்ணா என்பார்கள். ஆனால், உண்மை அது அல்ல. 1952-ம் ஆண்டு தேர்தலிலேயே கூட்டணி தொடங்கிவிட்டது. என்ன வேறுபாடு என்றால், பிறகு வந்த கூட்டணிகள் எல்லாம் தேர்தலுக்கு முன்னால் ஏற்பட்ட கூட்டணிகள். அப்போது உண்டானது, தேர்தலுக்குப் பின்னால் ஏற்பட்ட கூட்டணி. அரசியலில் தேர்தலும் அதன் கூட்டணிகளும் பற்றி சுவராஸ்யச் செய்திகள் சொல்கிறேன்.

சில பெரிய தலைவர்களின் சொற்களே அவர்களுக்கு எதிராக அமைந்துவிட்ட வரலாறு தமிழகத் தேர்தலில் உண்டு. ராஜாஜி, 1959-ம் ஆண்டு காங்கிரஸில் இருந்து பிரிந்து ‘சுதந்திரா கட்சி’யைத் தொடங்கியபோது காங்கிரஸை மிகக் கடுமையாக விமர்சித்தார். ‘காங்கிரஸ்,  சுதந்திரம் வாங்கிக்கொடுத்த கட்சி என்ற மாயை எல்லாம் போய்விட்டது. நேருவின் அழகில் மயங்கி தமிழ்நாட்டுப் பெண்கள் எல்லோரும் காங்கிரஸுக்கு வாக்களித்துவிடுகிறார்கள்’ என்று பேசிவிட... அது மிகப் பெரும் புயலைக் கிளப்பியது. நாடு முழுவதும் அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பின. அப்போது ராஜாஜி என்ன செய்தார் தெரியுமா? சொல்கிறேன்.

04-2-16 முதல் 10-2-16 வரை 044-66802911* என்ற எண்ணில் அழையுங்கள். அரசியல் வரலாறு பேசுவோம்.

அன்புடன்,

சுப.வீரபாண்டியன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick