க்ரைம்... த்ரில்... ஆக்‌ஷன்!

‘‘பெரிய பட்ஜெட், சின்ன பட்ஜெட்னு பட்ஜெட்டை மனசுல வெச்சு படங்கள் பண்றது கிடையாது. நல்ல படம் பண்ணணும், அவ்வளவுதான். ஏன்னா... சினிமா ஜெயிக்கிறது, பட்ஜெட்ல இல்லை; அதோட கன்டென்ட்ல தான்’’ - தெளிவாகப் பேசும் அருள்நிதி, ‘ஆறாது சினம்’ என ஆக்‌ஷன் அவதாரத்துடன் வருகிறார்.

‘‘ ‘டிமான்டி காலனி’ முடிச்சதும், ‘அடுத்து ஒரு நல்ல கதை அமைஞ்சா சேர்ந்து பண்ணுவோம்’னு தயாரிப்பாளர் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி சாரும் நானும் பேசிட்டு இருந்தோம். அப்ப, ` ‘மெமரீஸ்’னு ஒரு மலையாளப் படத்தின் ரைட்ஸ் என்கிட்ட இருக்கு. படத்தைப் பாருங்க. உங்களுக்குப் பிடிச்சிருந்தா பண்ணலாம்’னு சொன்னார். பார்த்தேன்... தொடர் கொலைகள், கொலையாளி யார்னு செதுக்கிவெச்ச மாதிரி அப்படி ஒரு பரபர க்ரைம் த்ரில்லர். யோசனையே இல்லாம ஒப்புக்கிட்டேன். அதுதான் இந்த ‘ஆறாது சினம்’. நிச்சயமா இது உங்களுக்குப் பிடிக்கும்.’’

‘‘உங்களின் உடல்வாகுக்கு போலீஸ் அதிகாரி கதாபாத்திரம் சரியாகப் பொருந்தும். அதில் என்ன ஸ்பெஷல்?’’

‘‘குடிகாரப் போலீஸ் அதிகாரி என்பதுதான் ஸ்பெஷல். கதையில் அதுக்கு ஒரு காரணம் இருக்கும். குடியை மறந்து அவன் மறுபடியும் வழக்கு, விசாரணை பக்கம் திரும்புவான். அது ஏன், எதுக்கு? அதில் வெற்றி அடைஞ்சானா... இல்லையா என்பதே கதை.

‘‘ரீமேக் செய்வது தவறு அல்ல. ஆனால், அது சவாலாயிற்றே. உங்கள் இயக்குநர் அறிவழகன், அதை எப்படிச் சமாளித்தார்?’’

‘‘அவர் இயக்கிய ‘வல்லினம்’ படம், நான் பண்ணவேண்டியது. அப்ப அமையலை. ‘அடுத்த படம் சேர்ந்து பண்றோம்’னு ஒவ்வொரு முறையும் பேசிப்போம். ஆனால், தள்ளிப்போய்க்கிட்டே இருந்தது. அந்தச் சமயத்துலதான், ‘இந்தப் படத்தை அறிவழகன் சார் பண்ணினால் நல்லா இருக்குமே’னு நினைச்சேன். ‘நானே அந்தப் படத்தை தமிழ்ல பண்ணணும்னு நினைச்சேன்ஜி. ஜீத்து ஜோசப்பின் ஒரிஜினல் கதையை டிஸ்டர்ப் பண்ணாம, அதன் அழகைக் கூட்டுறதுக்கு என்ன செய்யணுமோ அதை மட்டும் செஞ்சிருக்கார். அதுக்காக அச்சு அசல் காட்சிக்குக் காட்சி காப்பி அடிச்ச மாதிரியும் இல்லாம, தன் கிரியேட்டிவிட்டியைச் சேர்த்து அழகாக்கியிருக்கார்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்