பிரேமம் மலரும் ஃபேக் ஐ டி.யும்!

விக்னேஷ்வரி, ஓவியம்: ஹாசிப்கான்

`உங்கலை விரும்பறென்’ என, காதலர் தினத்தன்று ஃபேஸ்புக்கில் தனிச்செய்தி ஒன்று தப்புத்தப்பாகக் கிடைக்கப் பெற்றேன். சின்ன சுவாரஸ்யமாக, அப்போது என் குழந்தைகள், கணவர் சகிதமாக நிற்கும் புகைப் படமே முகப்புப் படமாக இருந்தது.

`பாருங்க, அந்தப் படத்துல இருக்கிற குழந்தைகள் என்னுதுதான். அதாவது எனக்கு ஏற்கெனவே கல்யாணமாகிருச்சு’ என, சந்தூர் மம்மிபோல் வெட்கத்தோடு சொல்ல ஆரம்பித்தால், `இது காதல் இல்லை, நீங்க பயப்பட வேண்டாம். ஒரு மாதிரி க்ரஷ்னு வைங்களேன். கவனிச்சிருப் பீங்களே, நீங்க எதை எழுதினாலும் முதல் ஆளா லைக் போடுவேன்’ என்கிறார். எனக்கு ஏகக்கடுப்பு.
`இல்லைங்க. அதெல்லாம் வேலைக்கு ஆகாது. எனக்கு இதுக்கே நேரம் போதல’ என்றதும், சட்டென, `ஏங்க, அந்த ‘...’ பெண் ஐடி., உங்க தோழியா? அவங்களுக்கும் உடனே உடனே லைக் போட்ருவேங்க’ என்றார்.

வெளி உலத்துக்கு சற்றும் குறைவில்லாத சுவாரஸ்யங்களை உள்ளடக்கியது இணையம். இங்கேயும் நல்ல காதல், கள்ளக் காதல், டைம்பாஸ் காதல், ஷங்கர் டைப் பளபளக் காதல், பாலா டைப்பிலான `ஐயோ பாவ’க் காதல், கெளதம் மேனன் டைப் `ஸ்டைலிஷ்’ காதல் என எல்லாவிதமான காதல்களும் உண்டு. கூடுதல் சுவாரஸ்யமாக, இங்கே காதல் என்பது மற்றவர் பார்வையில் இரண்டு ஐடி-களுக்கு இடையே ஏற்படும் கஜகஜா. அவ்வளவு ஏன்... இங்கு காதலிப்பவர்களுக்குள் வரும் முதல் சந்தேகமே, `இவர் உண்மையிலேயே எதிர்பாலினம்தானா?' என்பதுதான். கிட்டத் தட்ட காதல்போல ஏதோ ஒன்று வந்து, நேரில் சந்தித்தப் பிறகு `நண்பர்களாக இருப்போம்’ என மனம் மாறும் ‘மாற்றி யோசி’கள் புழங்கும் இடம்.

என் தோழியும் யாரையோ காதலிப்பதாகச் சொல்லிக்கொண்டிருந்தாள். `எந்த ஐடி-யை' எனக் கண்டுபிடிப்பது எனக்கொன்றும் கஷ்டமாக இல்லை. அதற்கெல்லாம் ஐடியாவும் ஆட்களும் உண்டு. இருவருக்கும் நேரில் சந்தித்ததும் மனம் மாறிவிட்டது. காரணம், என்னென்னவோ சொன்னாள். எனக்குப் புரிந்தது ஒன்றுதான். முகப்புப் படத்துக்கும் நேரில் பார்த்த ஆளுக்கும் சம்பந்தம் இல்லையாம். பெரும்பாலான காதல் நட்பாவதும், நட்பு காதலாவதும் முகப்புப் படத்துக்கும் நேரில் இருப்பதற்குமான ஆறு வித்தியாசங்களில்தான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்